கொடிக்கால்பாளையத்தில் துவங்கியது கோடைகால பயிற்சி முகாம் !!!
Posted by Kodikkalpalayam
on Friday, May 3, 2013
அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக மாணவ/மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் நமதூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் கடந்த 01-05-13 அன்று துவங்கி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.
பள்ளிவாசல் கீழ் தளம் மாணவர்கள்
மாணவ/மாணவிகளுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்து வருகின்றனர் இதில் 150 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் நடைபெற்று வருகிறது
பெண்கள் தொழுகை புகைப்படம்
இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்களை ஹதிஸ் ஆதாரங்களுடன் மாணவர்களுக்கு மாவட்ட பேச்சாளர் பருஜ்,ஹாசிக்கின் அவர்களும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார். மாணவர்கள் அதிகமாக இருப்பதால் இரண்டு பிரிவுகளாக பிரிக்க பட்டு கிளை பேச்சாளர் சகோ பைசல் பாமின் இர்ஷாத் மன்சூர் ஆகியோர் சிறுவர்களுக்கு பயிற்சியளிக்கின்றனர்.
சிறுவர்கள் பகுதி
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி 15-05-13 அன்று நடைபெறும் இன்ஷாஅல்லாஹ். தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் கிளை சார்பாக ஏற்பாடு செய்ய இருக்கும் பொதுகூட்டத்தில் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்.
கோடைகால பயிற்சி அழைப்பு நோட்டிஸ்
மாணவர்களின் மிதி வண்டி
மாணவரணி சகோ கூட்டம்
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts