11நாள் கைகுழந்தையை அடக்க மறுத்த அவலம் அடியக்கமங்கலத்தில் நடந்தது என்ன?

Posted by Kodikkalpalayam on Sunday, August 18, 2013


திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகரத்துக்கு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய  ஊர் அடியக்கமங்களம்,

16/08/2013 அன்று 11நாள்  கைகுழந்தை ஒன்று ரணித்துவிட்டது (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). மரணித்த குழந்தையின் குடும்பத்தினர் தவ்ஹீத் (நபி வழி) அடிப்படையில் தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று அடியக்கமங்களம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திடம் கோரிக்கை வைத்தனர்.அதன் பின் ஊர் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிளிடம் கிளை நிர்வாகிகள் மையவாடியில் அடக்க அனுமதி கோரினர் கோரிக்கையை மறுத்த அடியக்கமங்களம் சுன்னத் ஜமாத்தினர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை கீழ்த்தனமாக விமர்சித்தனர்.

விமர்சனத்துக்கு அஞ்சாமல் வெளியே வந்த நிர்வாகிகள் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்து ஆலோசனை நடைபெற ஊரில் பரபரப்பு ஏற்பட்டது!!!

11 நாள் கைகுழந்தை அடக்க மறுக்கும் செய்தி தீ போல் மாவட்டம் முழுவதும் பரவ அடியக்கமங்கலத்தை நோக்கி கொட்டும்  மழையையும்  பொருட்படுத்தாமல்  படையெடுக்க  தொடங்கியது தவ்ஹீத் கொள்கை குடும்பங்கள்...(அல்ஹ்ம்துலில்லாஹ்)

நேரம் ஆகா ஆகா  மீண்டும் ஒருமுறை இறந்த குழந்தையின் தகப்பனார் அவர்கள் ஊர் ஜமாத்திடம் போய் நல்லடக்கம் செய்ய அனுமதி கேட்க்க அதற்கும் அனுமதிக்காமல் அல்லோல்லப்படுத்தி அனுப்பி விட்டார்களாம். 

சம்பவம் நடத்த இடத்துக்கு அரசு (அதிகாரிகளுக்கும் காவல் துறைக்கும்) உளவுத்துறையின் மூலம் தகவல் தெரிவிக்க  சமபவ இடத்துக்கு தாசில்தார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் குமிய துவங்கினர்.மணி 11.30PM 
   (ஊருக்கு வக்காலத்து வாங்கிய காவல்துறைக்கு TNTJ சார்பாகபாடம் நடத்தபட்டது) 

ஒரு ஜனாசாவை எந்த முறையில் அடக்கம் செய்வது என்பதை தீர்மானிப்பது அந்த ஜனாசாவின் வாரிசுகளே (பெற்றோர்களே) அல்லாமல் ஊரில் இருக்கும் அல்லக்கைகள் அல்ல என்பதை காவல்துறைக்கு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் எடுத்து கூறினார்.

ஜனாசாவுக்கு சம்மந்தம் இல்லாதவன் நீ இப்படிதான் அடக்கனும் அப்படிதான் அடக்கனும் என கட்டுப்பாடுகள் போட்டு ஜனாச அடக்குவதை தடுத்தால் அவனை முட்டிக்கு முட்டிதட்டி உள்ளே போடுவதை விட்டு விட்டு அவனோடு பேச்சுவார்த்தை நடத்துவது கேவலமான ஒரு செயலாகும் என்பதையும் தவ்ஹீத் ஜாமாதினர் காவல்துறைக்கு புரிய வைத்தனர். 

அவன்வீட்டு எல்லையிலோ அல்லது அவன் வீட்டு ஜனாசாவையோ நாம் அடக்கம் செய்ய போனால் அவன் தடுப்பதில் நியாயம் உள்ளது ஊருக்கு பொது மையவாடியில் ஜனாசாவுக்கு சொந்தகாரன் அவன் எதை சரி என நினைக்கிறானோ அதன்படி அடக்கம் செய்வதற்க்கு எதிர்ப்பு தெறிவிப்பதும் அதை காவல்துறை வேடிக்கை பார்ப்பதும் நியாயமாகாது.என்று சொல்ல நாங்கள் மீண்டும் சுன்னத் ஜமாத்திடம் பேசபோகிறோம் என்று சென்றுவிட்டார்கள்...நேரம் 12.00am 
                                      பொங்கி எழுந்த கொள்கை சொந்தங்கள்!!! 

நேரம் ஆகா ஆகா பொருத்து பொருத்து பார்த்த தவ்ஹித் ஜமாத் இனிமேல் பேச்சுவார்த்தையும் கிடையாது ஒன்னும் கிடையாது அடக்கம் செய்ய போகிறோம் உங்களால் என்ன செய்ய இயலுமோ செய்து கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு ஜனாசவை எடுத்து கொண்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மையவாடி நோக்கி சென்றார்கள்.
(அடங்கிபோன போலி சுன்னத் ஜமாத்தார்கள் 
அடக்கிய வல்ல இறைவன் ) 

உடனே போலி வீரம் பேசியவர்கள் (கீழே விழுந்தாலும் மீசையில் மன் ஒட்டவில்லை என்ரு ஒரு பழமொழி சொல்வார்கள்) அதே போல நாங்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கிறோம் என சொல்லி மன்னுக்கு மட்டும் 320 ரூபாய் பனம் தாருங்கள் என்றார்களாம் இது 2013ம் ஆண்டில் மிகப்பெரிய நகைச்சுவை என சொல்லி ஊரில் உள்ள நடுநிலையாளர்கள் சிரிக்கிறார்களாம்,

இதை ஆரம்பத்திலேயே சொன்னால் 320 என்ன 520 ரூபாயாக தந்து இருப்போமே இதுக்கா இவ்வளவு கூத்து என கேள்விபட்டவர்கள் எல்லாம் காரிதுப்பாத குறையாக ஆதங்கப்படுகிறார்களாம் அடிக்கிரவகையில் அடித்தால் அம்மியும் ஆடும் என்பது இதன்மூலம் புறிகிறது,,, 

அல்லாஹ்வின் உதவியால் கைகுழந்தை நல்லடக்கம் இரவு 1.15க்கு நடந்து முடிந்தது.
                                                 அடியக்கமங்கலத்தில் இதுவே முதல் முறையாக நபி வழி முறையில் 
ஜனாஸா அடக்கம் எனபது குறிப்பிட தக்கது...                   
                                                                                                                                      செய்தி தொகுப்பு: கொடிக்கால்பாளையம் .இன் நிருபர் 

உண்மையை உரக்க ஊருக்கு நொடி பொழுதில் சொல்லும் பனி தொடரும்...

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top