கர்க்கரே கொலைக்கு ஐ.பிதான் காரணம்
Posted by Kodikkalpalayam
on Friday, January 22, 2010
0
நாக்பூர்:மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தீவிரவாத எதிர்ப்புப்படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்காரே மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது கொல்லப்பட்டார். இதற்க்கு இந்திய உளவுத்துறையான ஐ.பி தான் முழுகாரணம் என முன்னாள் காவல்துறை ஐ.ஜியான எஸ்.எம்.முஷ்ரிஃப் குற்றம்சாட்டியுள்ளார்.
நாக்பூரிலிலுள்ள தாவந்தே தேசிய கல்லூரியில் உரையாற்றும்பொழுது அவர் கூறியதாவது: மும்பைத் தாக்குதலைக் குறித்து விசாரணை மேற்கொண்ட பிரதான் கமிசன் அளித்த அறிக்கையானது பரிபூரணமில்லாத ஜோடிக்கப்பட்ட அறிக்கையாகும்.
ஹிந்துத்துவா பாஸிச சக்திகளின் செயல்பாடுகளை வெளிக்கொண்டுவந்த கர்காரேயை ஒழித்துவிட்டு தங்களது ஆதரவாளரான கெ.பி.ரகுவன்சியை ஏ.டி.எஸ்ஸின் தலைமைப்பதவிக்கு கொண்டுவருவதற்கான சதித்திட்டத்தின் பலன் தான் கர்காரேயின் படுகொலை.
தாஜ், ட்ரைடண்ட் ஹோட்டல்களிலும், சி.எஸ்.டியிலும் நடந்த தாக்குதலுக்கு சமமாகவே காமா மருத்துவமனைக்கு சமீபமாக கர்காரே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும். சி.எஸ்.டியிலும், காமா மருத்துவமனைக்கு வெளியேயுள்ள ரங்க் பவன் வீதியிலும் ஒரே சமயம் துப்பாக்கிச்சூடு நடந்ததை கண்ணால் பார்த்த சாட்சிகள் உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
சி.எஸ்.டியில் தாக்குதல் நடத்தியவர்கள் தான் இத்தாக்குதலையும் நடத்தினார்கள் என்றால் இரண்டு நிகழ்வும் ஒரே சமயத்தில் எவ்வாறு நிகழ முடியும்? காமா மருத்துவமனைக்கு தாக்குதல் நடத்த வந்தவர்கள் மராத்தி மொழியில் பேசினார்கள் என்ற சாட்சிகள் உள்ளிட்ட 11 ஆதாரங்கள் என் வசம் உள்ளது.
ஹிந்துத்துவ பயங்கரவாதத்துடன் தொடர்புடைய முக்கிய அதிகாரிகளின் பெயர்கள் வெளிவருவதை தடுப்பதை ஐ.பி யின் நோக்கம். பிரதான் கமிட்டியுடன் ஐ.பி ஒத்துழைக்கவில்லை. போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் மூலம் நிகழ்ந்த உரையாடலின் பதிவும் கமிட்டிக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
(source:www.palanibaba.blogspot.com)

Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்