விஜய் டி.வி.யின் விபரீத முயற்சியும்! டிஎன்டிஜேவின் உடனடி நடவடிக்கையும்!!

Posted by Kodikkalpalayam on Friday, January 22, 2010 0

விஜய் டிவியில் கடந்த வாரம் (17-01-2010) நடக்க இருப்பதாக காண்பிக்கப்பட்ட நீயா? நானா?’ என்ற நிகழ்ச்சியின் விளம்பரத்தில் முஸ்லிம் பெண்களே ஃபர்தாவை குறை கூறுவது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஒரு நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் அதுபற்றிய ஞானம் உள்ளவர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும்.

படிப்பறிவோ, அனுபவ அறிவோ இல்லாத ஒருவரிடம் அறுவை சிகிச்சை செய்வது எப்படி எனக் கேட்டால் தனக்கு எது தெரியுமோ அதைத்தான் அவர் கூறுவார். அவரது சொல்லைக் கேட்டு அறுவை சிகிச்சை செய்திட முடியாது. அதுபோலத்தான் இதுவும்.

வியாபார ரீதியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் அதில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை விதைப்பதுதான் தொலைக்காட்சிகளின் நோக்கம். அதற்காக இஸ்லாமியர்களையும், மற்றவர்களையும் விவாதத்திற்கு அழைக்கிறோம் என்று கூறி எதிர்தரப்பினரை சரியாக தேர்ந்தெடுத்துவிட்டு முஸ்லிம்கள் தரப்பில் அதுபற்றிய ஞானம் இல்லாதவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

அவர்களோ தங்கள் முகம் தொலைக்காட்சியில் தெரிந்தாலேபோதும் எனும் எண்ணத்தில் தங்களுக்கு தோன்றியதையும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் விரும்புவதையும் கூறிவிடுகின்றனர். இதனால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் ஏற்படும் பாதிப்பை இவர்கள் உணருவதில்லை. உதாரணத்திற்காக இதை குறிப்பிடலாம். ஸஹர் நேர நிகழ்ச்சிகளை பல இயக்கங்கள் தங்கள் செலவில் நடத்தும் போது பிரச்சினைகள் வருவதில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன் வின் டிவி நிறுவனத்தாரால் ஸஹர் நேர நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் எதிர் தரப்பில் எஸ்.வி. சேகரும் முஸ்லிம்கள் தரப்பில் இஸ்லாத்தை அறியாத ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவரை தேர்ந்தெடுத்ததே நான்தான் என்று எஸ்.வி. சேகரே குறிப்பிட்டார். அந்த பெயர் தாங்கி முஸ்லிமின் தொப்பியை எடுத்து எஸ்.வி. சேகர் தன் தலையில் வைத்தபோது புளகாங்கிதமடைந்த அவர், இது நான் ஹஜ்ஜுக்கு சென்றபோது வைத்த தொப்பியாகும். இதை நீங்கள் போடுவது எனக்கு பெருமை யாக இருக்கிறது என்று அழாத குறையாக கண்களில் நீர்மல்க கூறி நெகிழ்ச்சியடைந்தார்.

வெடிகுண்டுகளை வைப்பது முஸ்லிம்கள்தான் என எஸ்.வி. சேகர் குறிப்பிட்டபோது அதை ஆமோதிப்பவர்போல் மௌனம் காத்தார். இன்னும் எத்தனையோ இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்லும்போதெல்லாம் டிவியில் பங்கேற்பதுதான் அவருக்கு பிரதானமானதாக இருந்ததே தவிர பதில் சொல்ல முடியவில்லை. சொல்ல முடியவில்லை என்பதை விட சொல்லத் தெரியவில்லை என்பதே சரியானது. ஆக அந்நிகழ்ச்சியில் எஸ்.வி. சேகர், ஆர்.எஸ்.எஸ் சிந்தனையை புகுத்தியதைதான் காண முடிந்தது. முஸ்லிம்கள் சார்பாக நியமிக்கபட்டவரின் முன்பாகவே இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலைதான் இந்த நிகழ்சிசிகளிலும் ஏற்படும். அவ்வாறே ஏற்பட்டதாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு இயக்கத்தின் ஆலிமாவும் தற்போது கூறியுள்ளார். இன்னும் பல முஸ்லிம் அமைப்புகளும் அதை நிறுத்த வேண்டுமென கூறியுள்ளன. ஆனால் டிஎன்டிஜே இந்த நிகழ்ச்சியை வேண்டுமென்றே நிறுத்திவிட்டதாக சிலர் அவதூறு கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டதன் நோக்கத்தை அவர்கள் அறிவார்களானால் டிஎன்டிஜே செய்தது சரியானதே என அவர்களுக்கு புரியவரும்.

எதையும் குறுகிய கண்ணோட்டத்துடன் நோக்கி அவதூறுகளை அள்ளி தெளிக் காமல் பரந்த நோக்குடன் காண வேண்டும். முஸ்லிம்கள் மீது எத்தகைய சேற்றை வாரி இறைத்தாலும் அவர்கள் பெட்டிப் பாம்பாகத்தான் இருப்பார்கள், எதுவும் செய்ய மாட்டார்கள் என்று அன்றைய மீடியாக்கள் எண்ணிக் கொண்டிருந்தன.

அத்தகைய நிலையை நம்முடைய போராட்டங்கள் மாற்றி அமைத்தன. சமுதாயத்திற்கு எதிரான பிரச்சினைகளில் அவர்கள் சீறி எழுவார்கள் என்பதை அறிந்ததும் அடக்கி வாசிக்கப்பட்டது. ஆனாலும் இடையிடையே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமலில்லை. அத்தகைய நிகழ்வுகளில் நாம் மென்மையை கடைபிடித்தால் அது பழைய பல்லவியாகவே மாறும்.

இஸ்லாத்திற்கோ சமுதாயத்திற்கோ ஒரு இழுக்கு ஏற்படும்போது காலிக் கூடாரமான சில அமைப்புகளைப்போல நாம் எதிரிகளுக்கு சாதகமாக ஒருபோதும் நடப்பதில்லை. வலிமையான போராட்டங்களை நடத்த விளையும்போதுதான் அதில் மாற்றம் ஏற்படுகிறது. தவறிழைத்தவர்கள் தவறுக்கு வருந்துகின்றனர்; மறுப்பு வெளியிடுகின்றனர். எனவே ஆற, அமர யோசித்து செய்வோம் என்பது ஆதாயம் தேட நினைப்பவர்களின் அளவுகோல். நம்மை பொறுத்தவரை வலிமையான போராட்டங்களை நாம் அறிவிக்கும்போது அல்லாஹ் அதை வெற்றியடைய செய்வான் என்பது நம்முடைய அளவுகோல்.

இஸ்லாத்தையும், பர்தாவின் அவசியத்தையும் அறியாத பெயர்தாங்கி முஸ்லிம் பெண்களை வைத்து நடத்தும் இந்த நிகழ்ச்சியினால் இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என எண்ணி அந்நிகழ்ச்சியை தடை செய்ய போர்க்கொடி தூக்கியது டிஎன்டிஜே.
“பர்தா அணிவதே எனக்கு கேவல மாக உள்ளது. என்னுடைய பெற்றோர்கள்தான் என்னை நிர்ப்பந்தப்படுத்தி பர்தா அணிய வைக்கிறார்கள்…” என்று ஒரு முஸ்ம் பெயர்தாங்கி மாணவி சொல்லக்கூடிய காட்சியை டிரைலராக ஒளிபரப்பியது விஜய் டி.வி. டிரைலர் ஒளிபரப்பிய 10-01-2010 அன்று இரவு டிஎன்டிஜே மாநில செயலாளர் தவ்பீக் அவர்கள் விஜய் டி.வி. அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால் மிகப் பெரிய பிரச்சினைகளை விஜய் டி.வி. நிர்வாகம் சந்திக்க நேரிடும். நிகழ்ச்சியை நாங்கள் ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்ற உத்தரவாதத்தை விஜய் டி.வி. நிர்வாகம் தர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதைத் தொடர்ந்து மறுநாள் கடந்த 11-01-2010 அன்று நுங்கம்பாக்கத்திலுள்ள விஜய் டி.வி. அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற டிஎன்டிஜே மாநில நிர்வாகிகள் ஒன்றும் அறியாத அப்பாவிகளை வைத்து விவாதம் என்ற பெயரில் நாடகம் ஆடுவதை விட்டு விட்டு உங்களுக்கு பர்தா பற்றி ஆட்சேபனை இருந்தால் எங்களது மார்க்க அறிஞர்களுடன் விஜய் தொலைக்காட்சி நேரடி விவாதத்திற்கு தயாரா? என்ற அறைகூவலோடு, முஸ்ம்களின் மனதைப் புண்படுத்தும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் ஒளிபரப்பக் கூடாது என்ற செய்தியோடு கடிதத்தையும் வழங்கியது.
மேலும் சென்னை மாநகர ஆணையரிடத்தில் மத துவேசத்தை தூண்டும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்படி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்ற உறுதி மொழியை வியாழக்கிழமைக்குள் (14-01-2010) விஜய் டி.வி. நிர்வாகம் வழங்கவில்லையானால், வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்கு விஜய் டி.வி. அலுவலகம் முஸ்ம்களால் முற்றுகையிடப்படும் என்ற செய்தியையும் தெரிவித்துள்ளோம் என்பதையும் சென்னை கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமைக்குள் நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்ற உறுதிமொழியை வழங்காவிட்டால் வெள்ளிக்கிழமை விஜய் டி.வி. அலுவலகம் முற்றுகை என்ற செய்தி பரவ, பிரச்சினையின் விபரீதத்தை உணர்ந்த விஜய் டி.வி. நிர்வாகம் 12-01-2010 அன்று மதியம் 2 மணியளவில் மாநில நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டோம் என்று உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

போராட்டம் அறிவித்ததும் அதை ஆதரித்தவர்களில் ஒரு சிலர் அது தடை செய்யப்பட்டவுடன் வேறு சிலரால் உருவாக்கப்பட்ட ஃபித்னாவால் குமுற ஆரம்பித்து விட்டனர். நீயா? நானா?’ நிகழ்ச்சியில் கடைசி மூன்று நிமிடம் காலிக்கூடாரத்தின் தலைவர் பேசுகிறார் என்று நமக்கு தெரிந்ததால்தான் நாம் தடுத்தோமாம். அந்த நிகழ்ச்சியின் விளம்பத்தை பார்த்துதான் போராட்டத்தை அறிவித்தோமே ஒழிய யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியாது; அதன் அவசியமும் நமக்கில்லை. இஸ்லாத்தை தவறாக விமர்சிப்பவர்களுடன் யார் இருந்தாலும் அதை நாம் எதிர்க்கவே செய்வோம். வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்:

இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த நீயா? நானா?’ நிகழ்ச்சியில் பர்தா தேவைதான் என்று பேசிய சகோதரர் அமீருத்தீன் அவர்கள் நம்மை தொடர்பு கொண்டார். அவர் கூறியதாவது…

“பர்தாவின் அவசியத்தை பற்றி பேசக் கூடிய தரப்பில் என்னை அழைத்தார்கள். அங்கு சென்று கலந்து கொண்டபோது, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை மேற்கோள் காட்டி பேசியபோது, குர்ஆன் ஹதீஸ்களைப் பற்றியெல்லாம் பேசக் கூடாது என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் சட்டம் போட்டார். மேலும், பர்தா தேவையில்லை என்று சொல்லும் முஸ்ம் பெயர் தாங்கிகளுக்குத்தான் அதிக நேரம் வழங்கப்பட்டது. அதற்கு பதிலளிக்க முயன்ற நமது தரப்புக்கு மைக்கே வழங்கப்படவில்லை. மேலும் பர்தா தேவையில்லை’ என்று கூறிய தரப்பில் தனது உடன் பரிணாமங்கள் வெளியில் தெரியக் கூடிய அளவுக்கு இறுக்கமான ஆடையணிந்து ஒரு முஸ்ம் பெயர் தாங்கி பெண் நிகழ்ச்சி நடத்துனர் கோபி நாத்தை, கோபி… கோபி… என்று செல்லமாக அழைத்தார்.

அது அவரது தோழியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவரைப் போன்று முஸ்ம் பெண்கள் உடையணியலாமே என்று கோபிநாத் கூறி அந்த பெண்மணிக்குத்தான் நிகழ்ச்சியில் இறுதியில் பரிசும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நானே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். டிஎன்டிஜே முற்றுகைப் போராட்டம் அறிவித்ததும் முதல் சந்தோஷப்பட்டவன் நான்தான். தக்க தருணத்தில் டிஎன்டிஜே போராட்டத்தை அறிவித்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளது பாராட்டதக்கது…” என்று தனது மனக்கு முறலை நம்மிடம் கொட்டித் தீர்த்தார்.


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபரே இந்த அளவுக்கு நொந்துபோய் அதை எதிர்க்கின்றார் என்றால், நிகழ்ச்சியின் விபரீதத்தை சொல்த்தான் தெரிய வேண்டுமா?

கடந்த வருடம் அக்டோபர் மாதம் விஜய் டி.வி.யில் பெண்கள் தாலி அணிவது அவசியமா?’ என ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது இந்துக்களின் மனதை வேதனைப்படுத்தியது. அந்நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத், தான் எந்த முடிவை சொல்ல விரும்புகிறாரோ அந்த தலைப்பில் திறமையானவர்களை வைப்பது வழக்கம். பொதுவாகவே இந்நிகழ்ச்சிகளில் எவ்வாறு பேச வேண்டும் என்று முன்கூட்டியே ஒத்திகை பார்த்துதான் நடத்தப்படும். அவ்வாறு இந்த நிகழ்ச்சியில் தாலி தேவையில்லை எனும் அணியில் சிலரை சாமார்த்தியமாக பேச கோபிநாத் ஏற்பாடு செய்திருந்தார். விவாதம் சூடுபிடித்ததும் சில பெண்கள் தாலி தேவையில்லை. அது நாய் லைசென்ஸ் போன்றது என்றெல்லாம் சொல்ல அங்கே தனது வக்கிர புத்தியை கையாண்டார் கோபிநாத். அதாவது தாலி தேவையில்லை என்று சொன்ன ஒரு பெண்மணியிடம் அப்படியானால் நீங்கள் தாலியை கழற்றுவீர்களா? என கேட்க ஆம் கழற்றுவேன் என்று சொல்ல இங்கேயே கழற்றுவீர்களா? என மீண்டும் கேட்க, இதோ கழற்றுகிறேன் என்று கூறி அந்த பெண் தாலியை கழற்றி அவர் கையில் கொடுத்தார். கோபிநாத் எதிர்பார்த்தது அங்கே நிறைவேறியது. தாலியை கழற்றி கொடுத்த பெண்மணிக்கு பகுத்தறிவாளர், தைரியசாலி என புகழாரம் சூட்டி பரிசும் வழங்கப்பட்டது.

இதை பார்த்த இந்துக்கள் வெகுண்டெழுந்தனர். நாங்கள் புனிதமாக கருதுவதை பொதுமேடையில் விவாதிக்கும் நீங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை விவாதிக்கும் தைரியம் உண்டா? என விஜய் டிவிக்கு சவால் விட்டு சில தலைப்புகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி பர்தா அணிவதேன்?’, முஸ்லிம் பெண்கள் பள்ளிக்குள் அனுமதிக்கபடாததேன்?’, ரமலான் மாத நோன்பினால் பலனுண்டா?’, கிறஸ்தவர்கள் திருமணத்திற்கு பின் மோதிரத்தை கழற்றுவார்களா?’ என்பன போன்று பல தலைப்புகளை குறிப்பிட்டுள்ளனர்.
அவற்றில் ஒன்றான பர்தா விஷயத்தை கையிலெடுத்து நிகழ்ச்சி தயாரிக்க விஜய் டிவி திட்டமிட்டது. தாலி அவசியம் என பலர் பேசியதை எடிட் செய்து, தான் விரும்பியதை ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில் பர்தா விவாதம் எப்படி முடிவுறும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இஸ்லாத்தையும், பர்தாவின் அவசியத்தையும் உணராத பெயர்தாங்கி முஸ்லிம்களை கொண்டு பொது இடத்திலே தாலியை கழற்றி வைத்ததுபோல் விஜய் டிவியின் கோபிநாத், பர்தாவையும் கழற்றி வீச செய்ய திட்டமிட்டிருந்திருக் கலாம். ஆனால் அதற்கு முன் தவ்ஹீத் ஜமாஅத் அந்த அவல நிலையை தடுத்து விட்டது. ‘இது குறித்து சுதந்திரமான விவாதம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தால் பர்தா குறித்த எத்தகைய கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான விளக்கம் தர நாங்கள் தயார் என்பதை அறிவுறுத்துகிறோம். இதற்கு ஏற்பாடு செய்வதே விவேகமானதாகும்’ என்று விஜய் டிவிக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் எழுதிய தபாலில் குறிப்பிட்டுயிருந்தது.

ஏற்கெனவே நடத்த திட்டமிடப்பட்டிருந்த அந்த விவாத நிகழ்ச்சி குறிப்பிட்ட தினத்தன்று (17-01-2010) ஒளிபரப்பப்படவில்லை. முஸ்ம்களின் உணர்வுகளை மதித்து ஒளிபரப்பை நிறுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் பின்வருமாறும் அதற்கு அறிவுறுத்துகிறோம். மத விவகாரங்களை விவாதப் பொருளாக எடுப்பதை இனிமேலாவது விஜய் தொலைக்காட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அந்த அறிவுரை. எல்லா புகழும் இறைவனுக்கே

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top