* ரேஷன் கார்டுகள் மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு

Posted by Kodikkalpalayam on Sunday, December 19, 2010 0

இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் கார்டுகள் 2011 டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் கார்டுகளில் கூடுதல் தாள்கள் இணைக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.தமிழகத்தில் தற்போது 1.94 கோடி ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த 2005ம் ஆண்டு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு கால அவகாசம் 2009ம் ஆண்டுடன் முடிவடைந்தது. போலி ரேஷன் கார்டுகளை களைவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடந்த அரசு திட்டமிட்டது. அதனால்இ புழக்கத்தில் இருக்கும் ரேஷன் கார்டுகளில் இருந்த கூடுதல் தாள்கள் மூலம் 2010 டிசம்பர் 31ம் தேதி வரை செல்லத்தக்க வகையில் நீட்டிக்கப்பட்டது.

ஆனால் ரேஷன் கார்டுகளில் தாள்கள் தீர்ந்து விடும் நிலையில் இருந்தது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ‘‘இப்போதுள்ள ரேஷன் கார்டு அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை புழக்கத்தில் இருக்கும். அதற்காக ரேஷன் கார்டுகளில் கூடுதல் தாள்கள் இணைக்கப்படும்’’ என்று கடந்த வாரம் உணவு கூட்டுறவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ஸ்வரண்சிங் அறிவித்தார்.

இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘போலி ரேஷன் கார்டுகளை கண்டுபிடிப்பதற்காக ஏற்கனவே ஓராண்டு செல்லத்தக்க வகையில் நீட்டித்தோம். கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் சுமார் 15 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் காரணமாகஇ தற்போது ரேஷன் கார்டுகளை இன்னும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளோம். அதற்காக அந்த ரேஷன் கார்டுகளின் பின்பக்கத்தில் கூடுதல் தாள்கள் இணைக்கப்பட உள்ளன. இப்பணிகள் நாளை முதல் தொடங்குகிறது. 30ம் தேதிக்குள் அனைத்து கார்டுகளிலும் தாள்கள் இணைக்கப்படும். பொதுமக்கள் தாங்கள் பொருள்கள் வாங்கும் கடைகளில் ரேஷன் கார்டை கொடுத்து கூடுதல் தாள்களை இணைத்துக் கொள்ளலாம்’’ என்றார்.

நன்றி : தினகரன்

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top