கொடிநகர் சகோதர ! சகோதரிகளே ! ! எச்சரிக்கை ! ! !
Posted by Kodikkalpalayam
on Tuesday, December 13, 2011
0
சகோதர, சகோதரிகளே தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து..,. தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.
நமது பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக பிரச்சனைகள் அதிகளவில் உருவாக வாய்ப்புகள் அதிகம்.
பிள்ளைகளின் படிப்புகள் சீரழிய “சினிமா’ வும் ஒரு காரணமாக இருக்கிறது. “சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது. அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. ( எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு )கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>> DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க பெற்றோர்களும் காரணமாக ஆகிவிடுகிறார்கள்.
கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே !!
1. மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் ?
2. யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள் ?
3. தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.
4. கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.
5. இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...
என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா ? அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா ? என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா ? சந்தேகப்படுவதாக ஆகாதா ? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தொழுகையை நிலை நிருத்தும்படி ஏவுங்கள்.”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.” இது அல்லாஹ்வின் வாக்கு.
பெற்றோர்களே ! ! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம். அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக ! ஆமீன்.
சிந்திப்போம் ! செயல்படுவோம் ! !
நன்றி : சகோ. ஜாகிர்
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்