ம.ம.கவின் துரோகத்திற்கு மரண அடி! மக்கள் வெள்ளத்தில் மிதந்தது மண்ணடி!!

Posted by Kodikkalpalayam on Thursday, June 28, 2012

இடஒதுக்கீடு விஷயத்தில் ம.ம.கட்சி செய்த சமுதாய துரோகத்தை மக்களுக்கு தோலுரித்துக்காட்டும் முகமாக கடந்த 24.06.12 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மண்ணடியில் உள்ள தம்புச்செட்டி தெருவில் மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டத்தை வடசென்னை டிஎன்டிஜே நடத்தியது.

22.06.12 அன்று வெள்ளிக்கிழமைதான் இதற்கான அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் அவகாசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கு கொண்டது இந்த சமுதாயத்தின் விழிப்புணர்வை உலகிற்கு பறைசாற்றியது.
மக்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்திய பொதுக்கூட்டம் :
இந்த பொதுக்கூட்டம் குறித்து பேசிய பீஜே அவர்கள், ஒரு சமுதாய அமைப்பு செய்த துரோகத்தை அம்பலப்படுத்துவதற்காக கூட்டப்பட்ட இந்தக்கூட்டத்தில் இந்த அளவிற்கு கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகின்றது என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை முதலில் விளக்கினார்.
இவர்கள் செய்த இந்த சமுதாய துரோகத்தை தட்டிக்கேட்க ஆளில்லையா? என்ற கொதிப்பில் இருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் கோபத்தின் வடிகால்தான் இந்தப் பொதுக்கூட்டத்தில் இவ்வளவு கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோத காரணம் என்பதை பீஜே தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே ம.ம.கட்சியினர் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று கெஞ்சிக் கதறி கூத்தாடி இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரிக்கை வைத்து கேவலப்பட்டதையும், பொதுக்கூட்டம் குறித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் தனது கலகக் கண்மணிகளை ஏவி கிழித்துப் போட்டது குறித்தும் பேசிய பீஜே அவர்கள், “உண்மையிலேயே உங்களிடம் நியாயமும், உண்மையும் இருக்குமேயானால், நீங்கள் பதில் கூட்டம் போட்டு பதிலளிப்போம் என்று சொல்லியிருக்க வேண்டும். அதற்கு திராணியில்லாமல், இந்தக்கூட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக களம் கண்டதே நீங்கள் பொய்யர்கள். இந்த விஷயத்தில் உங்களிடம் உண்மையில்லை” எனபதை அது பறைசாற்றுகின்றது என்று தெளிவுபடுத்தினார்.
பட்டியலிடப்பட்ட மமகட்சியின் துரோகங்கள்:
பொதுக்கூட்டத்தின் துவக்கமாக மாநிலப் பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ம.ம.கட்சியினர் தடம்புரண்ட வரலாற்றையும், ஜால்ரா தட்டுவதில் சரித்திர சாதனை புரிந்த ஜால்ரா மன்னர் தட்டிய ஜால்ராக்களையும் அக்குவேறு ஆணிவேறாக பட்டியலிட்டு ம.ம.கட்சி செய்த சரித்திர சாதனையை விளக்கினார்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரம்தான் தமுமுகவுன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று கூறி ஏகத்துவத்தை காலில் போட்டு மிதித்து பதவி சுகம் காண பாதை மாறியவர்கள் நம்மையும், நாம் கொண்டுள்ள ஏகத்துவக் கொள்கையையும் அழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், தவ்ஹீத்வாதிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக ஏகத்துவக் கொள்கைதான் எங்களது உயிர் மூச்சு என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, மறுபுறம் இணைவைத்தலின் மறு உருவமாக, மொத்த ஏஜெண்டுகளாக இவர்கள் திகழ்வதையும், நயவஞ்சக நாடகமாடுவதையும் ஆதாரங்களோடு பட்டியலிட்டார்.
· திருவாவடுதுறை ஆதீனத்திடம் வாத்தியார் ஆசி வாங்கியது
· ஜோதிபாசுவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியது
· பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவில் இடையூறு இல்லாமல் செல்ல, சிறப்பாக இணைவைப்பு செயலில் ஈடுபட அவர்களுக்கு ஒளிரும் விளக்குகள் வழங்கியது
· மவ்லீது ஓதுவதற்கு தஃப்ரூக் வழங்க பணம் வசூலித்துக் கொடுத்தது
· பெரியார்களின் துஆ பரக்கத்தைப்பெற தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு கொடுத்தது
· தமுமுக சார்பாக மீலாது கந்தூரி விழாவிற்கு போஸ்டர் அடித்தது
· தமுமுக சார்பாக கன்னி பீவி தர்கா கந்தூரி விழாவிற்கு போஸ்டர் அடித்தது
· அல்டிமேட் ஸ்டார் அஜித் நற்பணி மன்றமாக மாறியது
· பன்னாடை விஜய் என்ற கூத்தாடிக்கு ஓட்டுக்காக பொன்னாடை போர்த்தியது
· பாபர் மசூதி விஷயத்தில் அலகாபாத் நீதிமன்றத்தீர்ப்பு அற்புதமான தீர்ப்பு என்று கூறி சமுதாய துரோகம் செய்தது
· போலி ஆன்மீகவாதி சாய்பாபாவின் மரணத்திற்கு இரங்கல் போஸ்டர் ஒட்டி ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கைப் பிடிப்பை நிலைநாட்டியது
· வாக்காளர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றோம் என்று கூறி இணைவைப்பில் மூழ்கியது
· சமுதாய ஆம்புல்ன்ஸை டிவி சீரியலுக்கு வாடகைக்கு விட்டு காசுபார்த்து சமுதாய சேவை(?)யாற்றியது
· சந்தியாகப்பர் ஆலய தேரோட்டத்தில் கலந்து கொண்டு சத்தியத்தை(?) நிலைநாட்டியது
· கிறித்தவர்களிடம் நாம் நடத்திய விவாதம் அவர்களது உள்ளத்தை புண்படுத்தியதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு ஏகத்துவத்தை பறைசாற்றியது(?)
· வாக்காளப் பெருமக்களே! வணக்கம் என்று வாக்காளர்களை வணங்கி போஸ்டர் அடித்தது
· சிலை திறப்பு விழாவிற்கு அழைப்புக் கொடுத்து போஸ்டர் அடித்தது
என்று இவர்கள் கொள்கை கெட்டு, இணைவைப்பின் பக்கம் விழுந்து, இஸ்லாத்தை விட்டு வெளியேறக்கூடிய செயல்களை செய்துவிட்டு, “ஏகத்துவமே எங்கள் உயிர்மூச்சு” என்று கூறி டயலாக் விடும் நயவஞ்சகத்தனத்தை மேற்கூறிய ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்தோடு எடுத்துக்காட்டி அவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார்.
மேற்கூறிய அனைத்திற்கும் உரிய ஆதாரங்களை அறிய click Here
ஒருபக்கம் கொள்கைகெட்டவர்களின் கொள்கை உறுதியை புட்டுபுட்டு வைத்த பொதுச்செயலாளர் அவர்கள் மறுபக்கம் மாமாவையும், ஜால்ராவையும் பிரிக்கவே முடியாது என்ற அளவுக்கு ம.ம.கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் ஜால்ரா தட்டுவதில் சரித்திர சாதனை புரிந்த பட்டியலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.
அம்மாவும், மாமாவும்; மாமாவும் ஜால்ராவும்:
அம்மாவையும், மாமாவையும் பிரிக்க முடியாது என்பது போல, மாமாவையும் ஜால்ராவையும் பிரிக்க முடியாது என்பதற்கு ஆதாரமாக சட்டமன்ற ஜனாஸா தனது சட்டமன்ற உரையின் போது எப்படி எப்படியெல்லாம் அம்மாவுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டியுள்ளார் என்பதை தேதி வாரியாக தெளிவுபடுத்தியது மிகவும் சுவாரசியமாக இருந்தது.
இவ்வளவு நாள் நடந்த சட்டமன்ற வரலாற்றில், ஒரு எதிர்க்கட்சியிலுள்ள எம்.எல்.ஏ ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக இந்த அளவிற்கு, இவர் ஜால்ரா தட்டிய அளவிற்கு யாரும் ஜால்ரா தட்டியதில்லை என்று சரித்திர சாதனை புரியக்கூடிய அளவிற்கு இவரது ஜால்ரா புகழ் கொடிகட்டி பறக்கின்றது என்பதற்கு எடுத்து வைக்கப்பட்ட ஆதாரங்கள் :
தானே புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய போது, அனைத்து தமிழக மக்களும் தங்களது மாவட்டத்திற்கு தானே புயல் வராதா? என ஏங்குவதாகச் சொல்லி அதிமுகவினரையே அசர வைத்தது
மக்களெல்லாம் மின்வெட்டு விலைவாசி உயர்வு, கொலை கொள்ளை என்று பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகின்றார்கள் என்று கூறி அசடு வழிந்தது
அம்மா அவர்கள் தான் சந்தித்த 100 பந்துகளிலும் சிக்ஸர் விளாசியுள்ளார் என்று புகழ்ந்து தள்ளியது. (ஆனால் அம்மா வீசிய பந்தில் முஸ்லிம் சமுதாயம் கிளீன் போல்டாகி, ஆல் அவுட் ஆகிக் கிடப்பது தனி விஷயம்)
பூரண மதுவிலக்கு கோரி ஒரு பக்கம் போராட்டம் நடத்திவிட்டு மறுபக்கம் பூரண மதுவிலக்கு கோருபவர்கள்தான் கள்ளச் சாராயம் காய்ச்சுகின்றார்கள் என்று முதல்வர் சொன்ன போது ஜனாஸாவாக அமர்ந்திருந்து ஜால்ரா தட்டியது
மனிதனுக்கு மட்டுமல்ல பறவைக்கும் இழப்பீடு வழங்கும் புண்ணியவதிதான் அம்மா அவர்கள் என்று அவிழ்த்து விட்டது
இராமேஸ்வரத்தை புனித பூமியாக அறிவிக்க சொல்லி பள்ளிவாசல்களுக்கு ஆப்பு வைத்தது
இராமேஸ்வரத்திற்கு ஏராளமான யாத்திரிகர்கள் இணைவைக்க வருகின்றனர். அவர்களுக்கு இணைவைக்க சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துதரச் சொல்லி அவர்களுக்கு சிங்கியடித்தது
சட்டசபைக் கூட்டத்தொடர் முடியப்போகின்றது என்று தான் வருத்தத்தில் இருப்பதாகவும், நான் ஏன் வருந்துகின்றேன் என்றால், சட்டசபைக் கூட்டத்தொடர் முடிந்துவிட்டால் அம்மா அவர்களின் அறிவிப்புகளும் நின்றுவிடுமே! அதனால்தான் நான் வருத்தப்படுகின்றேன் என்று கூறி வருத்தம் தெரிவிப்பதிலும் ஜால்ரா போட்டது
மரணதண்டனையை ஒழித்துக்கட்டவும், முஸ்லிம்களை கொன்று குவித்த கோரப் புலிகளுக்கு ஆதாரவாக சட்டசபையில் அம்மா அவர்கள் தீர்மானம் போட்டது பெருநாள் பரிசு என்று இவர் அறிவித்து சட்டசபைக்கு வெளியிலும் ஜிங்சா தட்டியது
காரித்துப்பும் ஆட்சிக்கு ஆதரவாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்கி கேலப்பட்டது
என்று இவர் தட்டிய ஜால்ராவிற்கு அளவே இல்லை என்பதை ஆதாரங்களோடு எடுத்து வைத்தார். இப்படியுமா ஒருவரால் ஜால்ரா தட்டமுடியும். இவர் வாங்கிய காசுக்கு அதிகமாக ஜால்ரா தட்டுகின்றார் என்று அதிமுகவினரே வியந்து பாராட்டக்கூடிய அளவிற்கும், காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ ஒருவர் இவரது ஜால்ராவைக் கேட்டு மயக்கமுற்று தலைசுற்றி விழக்கூடிய அளவிற்கு இவர் ஜால்ரா தட்டி “அகில உலக ஜால்ரா மன்னர்” பட்டத்தைப் பெற இவர் நடத்திய அனைத்து முயற்சிகள் குறித்தும் அம்பலப்படுத்தினார் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்.
அடுத்ததாக, சகோதரர் பீஜே அவர்கள் இடஒதுக்கீடு விஷயத்தில் இவர்கள் எந்த அளவிற்கு துரோகமிழைத்துள்ளார்கள் என்பதையும், அரசு அதிகாரிகள் செய்த துரோகத்தை எப்படியெல்லாம் இவர்கள் மறைப்பதற்காக எப்படியெல்லாம் முட்டுக்கொடுத்து மோசடி செய்தார்கள் என்பதை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். பீஜே அவர்கள் பேசிய முழுவிபரங்கள் குறித்த தொகுப்பை, “அம்பலமானது ம.ம.க.வின் சமுதாய துரோகம்!” என்ற தனித்தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் காணலாம். அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ ஆன்லைன்பிஜே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top