அச்சுருத்தல் இல்லாத குடியரசு தினம்! தினமலர் திருந்தி விட்டதா?
Posted by Kodikkalpalayam
on Saturday, January 26, 2013
சுதந்திர தினம்,குடியரசுதினம் மட்டுமின்றி தீபாவளி,கிறிஸ்துமஸ் போன்ற மத பண்டிகை தினங்களிலும் "தீவிரவாத அச்சுருத்தல்", குடியரசு/சுதந்திர தின கொண்டாட்டங்களைச் சீர்குலைக்க பாகிஸ்தான்/லஷ்கர் தீவிரவாதிகள் சதி/ ஊடுறுவல்" என்றெல்லாம் பீதிகிளப்புவதோடு, ஓரிரு மாதங்கள் முன்னதாவே சந்தேகத்தின் பெயரில் அப்பாவிகளை குறிப்பாக முஸ்லிம்களை அதிலும் தாடி வைத்திருந்தால் கூடுதல் அடைமொழியுடன் பரபரப்பு செய்தி வெளியிட்டு கைது செய்து, மேற்கண்ட தேசிய கொண்டாட்ட தினங்களில் முஸ்லிம்களை தனிமைபடுத்தி சுகம்கண்ட ஊடகங்களில் 'தினமலம்' மற்றவர்களைவிட சற்று கூடுதலாகவே சுகம் கண்டது.
26-01-2012 இந்தியாவில் 56 ஆவது குடியரசு தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த செய்தியில் இடம்பெற்றிருந்த தினமலர் செய்தியின் வாசகங்களை வாசகர்கள் விளங்கிக் கொள்வதற்காக அப்படியே பதிகிறோம்.
நமது கேள்வி என்னவென்றால்,
- "இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது? நாட்டில் இதுவரை குழப்பம் செய்த தீவிரவாதிகள் எல்லோரும் திருந்தி விட்டார்களா?
- நாட்டில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராடி வருபவர்களின் கோரிக்கைகளை எல்லாம் அரசு ஏற்று நிறைவேற்றி வைத்து விட்டதா?
- லஷ்கர் தீவிரவாதிகள், எல்லை தாண்டுவதை நிறுத்திக் கொண்டார்களா?
- இதுவரை இத்தகைய பீதியைக் கிளப்பி,பரபரப்பு ஏற்படுத்தியது நம்நாட்டு உளவுத்துறையிலுள்ள சில மதவெறியர்களா?
- அல்லது தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் திருந்தி விட்டனவா?.........
- உண்மையை உரக்க சொல்லும் பணியில் .........

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts