ஹாஸ்பாவ தர்காவில் நடந்த (கந்தூரி) விழா ஓர் இஸ்லாமிய பார்வை

Posted by Kodikkalpalayam on Sunday, June 23, 2013


அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத அல்லாஹ்தடை செய்த ஒன்றை நமதூரில் கந்தூரி என்ற பெயரில் கொண்டாடி வருகிறோம் இதை மார்க்க அறிஞர்களே லப்பைகளே, போலி ஊர் ஜமாத்தார்களே பொதுமக்களே 
 உங்களின் மார்க்க அறிவை மாறு ஆய்வு செய்யுங்கள்.
                                     கழிசடை விழா போஸ்டரை பாருங்கள் 
நபியவர்கள் காட்டித்தராதவை மார்க்கமாக முடியாது..
இஸ்லாமிய மார்க்கத்தில் எதையாவது ஒன்றை இபாதத்தாக (வணக்கமாக) செய்ய வேண்டும் என்றால் அந்த வணக்கம் அல்லாஹ்வினாலும் அவனுடைய தூதரினாலும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எந்த வணக்கத்திற்கு இந்த அங்கீகாரம் இல்லையோ அந்த வணக்கம் இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதுநிராகரிக்கப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி:2697
       அருள் வழங்குவது  ஹாஸ்பாவா தான் ஊர் ஜமாத்தார்கள் ஒப்புதல்  

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூல்: முஸ்லிம்:
3243

ஆக நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு இஸ்லாமிய அனுமதியுண்டா என்று பார்ப்பது முதல் கடமை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பழுக்கற்ற விதத்திலே வாழ்ந்து வியப்பிற்குரிய வாழ்வியல் திட்டத்தை நம்மிடத்திலே சமர்பித்துச் சென்றுள்ளார்கள். அவர்களுடைய வாழ்வின் அடிப்படையில் நமது அமல்களை அமைத்துக்கொண்டால் தான் மறுமையிலே அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அருகதையானதாக இருக்கும். இல்லையெனில் அல்லாஹ்விடத்திலே அவை மதிப்பற்றதாக கருதப்பட்டு தூக்கியெறியப்பட்டுவிடும். இதை நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அநேகமான முஸ்­லிம்கள் அண்ணலாரின் வழிமுறையை சரியான முறையில் அறியாமல் அவருக்கு நேர்மாற்றமாக பல வணக்கவழிபாடுகளை செய்வதோடு அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரமின்றி பலகாரியங்களை நன்மைகிடைக்குமெனக் கருதி செய்துகொண்டிருக்கிறார்கள்
தேரோட்டத்திற்கு தயாராக இருந்த கூடு 
உதாரணமாக மீலாது விழா பாத்திஹா, கந்தூரி விழா மற்றும் மவ்லூது இதுபோன்ற காரியங்களை மார்க்கத்தின் பெயரால் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மறுமையிலே இந்த நூதனமான காரியங்களுக்கு நன்மை கிடைக்காததோடு இவை நரகத்திலே தள்ளக்கூடிய வழிகேடுகள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

எனவே, நமது அமல்கள் மகிழ்ச்சியான சுவர்க்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டுமெனில் அவற்றை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுத­ன்படி அமைத்துக் கொள்ளவேண்டும்.

நீங்கள் மார்க்கத்தை பார்க்காமல் - பாரம்பரிய பழக்க வழக்கத்தை பார்த்து விடமருகிரீகள்... அல்லாஹ்வின் முன் நாளை மறுமையில் தனி தனியாக நிற்கவேண்டும் .. அப்போது யாரும் வரமாட்டார்கள்... அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்கள்...

அல்குர்ஆன் கூறுகின்றது 
اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الأَمْوَالِ وَالأَوْلادِ كَمَثَ
لِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرّاً ثُمَّ يَكُونُ حُطَاماً وَفِي الآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنْ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلاَّ مَتَاعُ الْغُرُورِ ( الحديد 20)“அறிந்துகொள்ளுங்கள்!!. இவ்வுலக வாழ்க்கையானது வீண் விளையாட்டும், கேளிக்கையும், ஆடம்பர – அலங்காரமும், செல்வத்தையும் பிள்ளைகளையும் வைத்துப் பெருமையடித்துக் கொள்வதுமேயன்றி வேறில்லை. எப்படி ஒரு மழையின் மூலம் பயிர்கள் செழித்து வளர்வது கண்டு விவசாயிகள் ஆச்சரியப்பட்ட வேளை பின்னர் அது காய்ந்து மஞ்சள் நிறமாகி பின் சருகாகி விடுகின்றதோ. (இவ்வாறுதான் உலக வாழ்க்கையும்) மறுமையில் (இவ்வுலகில் தீமை புரிந்தோருக்கு) மிகக் கடுமையான வேதனையும், (நல்லோருக்கு) அவனது கருனையும் மன்னிப்பும் காத்திருக்கின்றன. இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை.” (ஸூரா அல்ஹதீத் : 20)
அடக்கத்தலத்தில் விழா எடுக்க கூடாது
உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746
 தர்காவிற்க்கு செல்லும் வழியில் TNTJ சார்பாக வைக்கப்பட்ட விழிப்புணர்வு ப்ளெக்ஸ் போர்டு 

பிரத்தனைகள் இவர்களின் ஹிதாயத்திற்கு வழி வகுக்கட்டும்.. ..

ஆகவே  ,அல்லாஹ்வை ஈமான் கொண்டு நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை பின்பற்றி முஸ்லிம்களாக வாழ முன்வருமாறு அன்புடன் அழைக்கிறோம். நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது  21ம் நூற்றாண்டு விஞ்ஞான யுகம் எனவே உங்களுக்கு சிந்தித்து செயல்படும் அறிவு உள்ளது என்று .மறுமைநாளிலே நம்மைக் காப்பாற்றக்கூடியதாக நமது அமல்கள் இருக்க வேண்டுமெனில்மீலாது விழா பாத்திஹாகந்தூரி விழாமற்றும் மவ்லூது இதுபோன்ற காரியங்களை'விட்டுவிடவேண்டும்.

அன்பார்ந்த சகோதர்களே , இந்த கந்தூரியின் விளைவை நீங்கள் இங்கு உணர்வது குறைவு தான் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா மறுமையில் நீங்கள் உணர்வீர்கள் , இந்த கந்தூரியை நடத்துவது அதற்கு உதவி செய்வது யாராயினும் கண்டிப்பாக அவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது , கண்டிப்பாக அவர்கள் பெயர்தாங்கி முஸ்லிமே தவிர , அவர்கள் நபிகள் கொண்டு வந்து கொடுத்த இஸ்லாத்தை தாங்குபவர் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...

உண்மையை  உரக்க ஊருக்கு சொல்லும் பனி தொடரும்...

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top