ஜெயய்ப்பூரில் அரங்கேற்றப்படவுள்ள நாடகம், அம்பலம்!!
Posted by Kodikkalpalayam
on Monday, September 9, 2013
0
மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அணியும் தொப்பி - ஸ்கார்ப் - புர்கா ஆர்டர்!
முஸ்லிம்கள் அணியும் தொப்பி, பெண்கள் அணியும் ஸ்கார்ப் - புர்கா போன்ற ஆடைகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, ராஜஸ்தான் பாஜக தலைவரான 'வசுந்தரா ராஜே'விடம் கேட்கப்பட்டபோது, இதை ஒப்புக் கொண்ட வசுந்தரா, ஆம்,
மோடியின் கூட்டத்துக்காக முஸ்லிம்கள் அதிகளவில் அழைக்கப்பட்டுள்ளனர்.
பேரணியில் கலந்துக் கொள்ளும் முஸ்லிம் ஆண்கள், தொப்பி அணிந்தும், பெண்கள், பர்தா அணிந்தும் வரவேண்டும் என பாஜக மேலிட ஆலோசனையின் பேரில் முஸ்லிம்களுக்கான "டிரஸ் கோட்" முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
'அஜ்மீர் தர்கா' ஊழியர்கள், அங்கு வரும் யாத்ரீகர்கள் என பெருமளவில் முஸ்லிம் தலைகளை பேரணியில் கலந்துக் கொள்ள செய்ய திட்டம் தீட்டி செயல்படுகின்றனர்.
இப்படி, பெயர் தாங்கி முஸ்லிம்கள் சிலரையும்,
வேறு சிலரை, முஸ்லிம்கள் அணியும் தொப்பி, புர்கா அணிவிக்கப்பட்டு 'ஆள்மாறாட்டம்' செய்தும், கூட்டத்தை காண்பிக்கும் முயற்சியில் ராஜஸ்தான் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதற்காக, 8,000 தொப்பி, 12,000 புர்கா, சில ஆயிரம் ஸ்கார்ப் களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 'மோடியின் கூட்டத்தில் அலை மோதிய முஸ்லிம்களின் கூட்டம்'
என்ற தலைப்பில் மீடியாக்களின் விளம்பரம் பெற்று, முஸ்லிம்களும் பாஜக பக்கம் வரத்துவங்கி விட்டது போன்ற ஒரு மாயை ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளனர்.
குறிப்பு :
மோடியின் 'ஹைதராபாத்' கூட்டத்துக்காக முதலில் பதிவு செய்ததே ஒரு முஸ்லிம் பெண் தான், என ஏற்கனவே இவர்கள் செய்த பித்தலாட்டத்தைப் பார்க்க..
http://

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்