நடைபெற உள்ள கந்தூரி விழா.! அறிவை அடகு வைக்க தயாராகும் அவ்லியா பக்தர்கள்.!(காணொளி)

Posted by Kodikkalpalayam on Friday, December 20, 2013 0

60 அடி பாவா 40 அடியாக மாறிய அவலம்....!!!

இஸ்லாம் என்பது அல்லாஹ்வினால் இம்மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு அதை இறுத்தித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலம் பூரணமாக்கிவிட்டான் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதுபோல் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கும் சுரண்டல்களையும் தடுத்துவிட்டது. இஸ்லாத்தில் இடைத்தரகர்களோ, மூட நம்பிக்கைகளோ சிறிதுமில்லாமல் அதன் வாசலை முற்றிலுமாக அடைத்துவிட்டது. ஆனால், இன்று இஸ்லாத்தில் இல்லாத தகடு, தாயத்து, தர்கா வழிபாடு போன்றவற்றை இஸ்லாத்தினுள் புகுத்தி அதையே இஸ்லாம் என்று நடைமுறப்படுத்தி மார்க்கத்தின் பெயரால் சில அறிஞர்கள் (?) பிழைப்பு நடத்தி வந்தனர்; இன்றும் நடத்தி வருகின்றனர். அதிலொன்றுதான் கேடு கெட்ட தர்கா வழிபாடு....

முன்னைய காலத்தில் வாழ்ந்து மரணித்த நல்லாடியார்களின் கப்ருகளின் மீது ஓரு வழிபாட்டுத்தலத்தை எழுப்பி அதில் மக்கள் தங்களது தேவைகளை கேட்டல், அவர்களுக்காக அறுத்துப்பலியிடல் போன்ற செயல்களை செய்து வருகின்ரனர். இது இஸ்லாத்தின் அடிப்படையோடு பலமாக மோதுகின்ற ஒரு மாபாதகச்செயலாக கருதப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் ஷிர்க எனும் நிரந்தர நரகத்தில் கொண்டு போய்ச்சேர்த்து விடும் கொடிய இணைவைத்தலாகும். இதை அறியாத சில மக்கள் இதுதான் சரியானது என்றெண்ணி தமது வாழ்க்கையையே நாசம் செய்து கொண்டிருக்கின்றனர்....

இறந்தவர்கள் இறந்தவர்களே...!

ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இறந்த ஒரு மனிதனால் கேட்கவோ, பார்க்கவோ முடியாது!

குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச்செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. (திருக்குர் ஆன் 35:19-22)

மரணித்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்று அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான். ஆனால் இன்று மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றனர்? அவ்லியாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் செவியேற்பார்கள். எமது கோரிக்கையை நிவர்த்தி செய்வார்கள் என்று குருட்டுத்தனமாக நம்பி நரகத்தின் கொள்ளிக்கட்டையாகிக்கொண்டிருக்கின்ரனர். இதை விட்டும் அல்லாஹ் எம்மை காப்பாற்ற வேண்டும்.

ஷா வலியுல்லாஹ்வின் பெயரில் நடக்கும் பித்தலாட்டம்

தர்கா வழிபாடு இந்தியாவிலும் இலங்கையிலும் மலிந்து கானப்படுகிரது. ஊருக்கொரு அவ்லியா தெருவுக்கொரு அவ்லியா என்றும் பத்தாமல் நாலுக்கு நாள் புதுப்புது அவ்லியாக்கள் முளைத்துக்கொண்டும் இருக்கின்ரனர். அந்த வகையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு பிரபல்யமான தர்காவாக நாகூர் தர்காவை எடுத்துக்காட்டலாம் இது மட்டுமன்றி அடையாளங்காணப்படாத தர்காக்கள் இன்னும் இருக்கின்றன.

அண்மையில் தொலைக்காட்சியில் நோன்பில் இரவு நேர நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டடத்தில் உள்ள கொடிக்கால்பாளையம் எனும் ஊரில் அமையப்பெற்றிருக்கும் 60 அடி வலியுல்லாஹ் என்பவரின் தர்கா எடுத்துக்காட்ட்டப்பட்டது. இதில் அந்த தர்காவில் நடக்கும் ஒரு கேலிக்கூத்தான செயல் ஒன்று வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த தர்காவில் அடக்கப்பட்டிருக்கும் 60 அடி வலியுல்லாஹ் வலிவுல்லாவாக மாறியதாக அந்த தர்கா முத்தவல்லியின் போலி தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு கட்டப்பட்டது

இது தொடர்பான விளக்கங்களுக்கு வீடியோவை பார்த்து அறிந்து கொள்க!) ஆனால் இந்த அவ்லியா பக்தர்களோ இது அந்த அவ்லியாவின் கராமத் என்று அறிவை இழந்து பேசுவது மிகவும் வேதனையாகவுள்லது. இது அறிவியலும் இல்லை! இஸ்லாத்திலும் இதற்கு ஆதாரம் இல்லை! என்பதை ஏனோ சிந்திக்க மறந்துவிட்டனர்.

நமதூரில் நடைபெற உள்ள இதுபோன்ற கந்தூரி நிகழ்ச்சிக்கு இணை வைக்கும் காரியத்திற்கு பெண்கள் குழந்தைகள் மற்றும் குடும்பநண்பர்களை அனுப்பவேண்டாம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கேட்டுகொள்கிறோம்

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணைக்  கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)      அவர்கள் இணைக் கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top