ஐ.எஸ்.ஐ,எஸ். போராளிகள் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு என்ன?
Posted by Kodikkalpalayam
on Wednesday, July 16, 2014
0
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ,எஸ். போராளிகள் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின்
நிலைபாடு என்ன?
அப்துர் ரஹ்மான், கோவை
பதில் : வெளிநாடுகளில் உள்ள இயக்கங்கள் பற்றி முழுமையான, உண்மையான செய்திகள் நமக்கு கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் உள்ள இயக்கங்கள் என்றால் அவர்களின் கொள்கை, கோட்பாடு, கடந்த கால செயல்பாடு, நாணயம், நேர்மை ஆகியவை குறித்து முழுமையாக நாம் அறிய இயலும், உடனடியாக கருத்தும் சொல்ல முடியும்.
வெளிநாடுகளில் செயல்படும் இயக்கங்கள் குறித்து நமக்கு உண்மையான, முழுமையான அறிவு இல்லை. ஷியாக்களின் ஆதிக்கத்துக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு செயல்படுவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று நமக்குக் தெரியவில்லை. ஈரானில் ஏற்பட்ட ஷியா புரட்சியை இஸ்லாமிய புரட்சி என்று பாராட்டும் இயக்கத்தினர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தையும் அதே அளவு ஆதரித்து கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இதன் மர்மம் நமக்குப் புரியவில்லை.
சன்னி பிரிவு என்றால் மத்ஹபுகளைச் சார்ந்தவர்களா? தர்கா வழிபாடுகளில் நம்பிக்கை உள்ளவர்களா? இதை எதிர்க்கும் ஸலபு பிரிவினரா? இவர்கள் அனைவரும் சன்னி என்றுதான் தம்மைக் கூறிக் கொள்கின்றனர்.
மேலும் அப்பாவிகள் மீதும் வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதும் அப்பாவிகளைக் கொள்வதும் ஜிஹாத் என்று கூறுபவர்களா? அல்லது போரில் மட்டுமே எதிரிகளைக் கொள்ளக் கூடியவர்களா என்பதெல்லாம் ஆதாரத்துடன் நமக்குத் தெரியவில்லை.
மேலும் அவர்களைப் பற்றி கருத்துக் கூறும் தேவை எதுவும் நம்மிடத்தில் ஏற்படவில்லை. இதை அறிந்து, நாம் அவர்களுடன் சேர்ந்து போருக்கு போகப்போவதில்லை.
எனவே இந்நிலைமை முழுமையாகத் தெளிவாகும் வரை இது பற்றி எதுவும் கூறுவதில்லை என்பதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் இப்போதைய நிலை.
மார்க்க & சமுதாய செய்திகளை உடனுக்கு உடன்
அறிந்து கொள்ள லைக் செய்யுங்கள்.

Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்