இந்தியாவில் பொதுசிவில் சட்டம் சாத்தியமில்லை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை

Posted by Kodikkalpalayam on Tuesday, October 25, 2016 0


128 கோடி மக்கள் தொகை, 200 மொழிகள் பேசப்படும் இந்தியாவில் பொதுசிவில் சட்டம் சாத்தியமில்லை பன்முகத் தன்மையை சீர்குலைக்க கூடாது; குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை
கோடி மக்கள் தொகை, 200 மொழிகள் பேசப்படும் இந்தியாவில் பொதுசிவில் சட்டம் சாத்தியமில்லை என இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சூசகமாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத், காந்தி நகரில் பாபு குஜராத் அறிவுசார் கிரா மத்தில் குஜராத் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சங்கர் சிங் வகேலா நடத்திய மாணவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:- நமது பன்முகத்தன்மையை நீக்கவோ மற்றும் அதனை செயற்கையாக பொதுசிவில் சட்டமாக கொண்டுவரவோ முயற்சிக்க கூடாது. இது இந்தியாவின் பண்பாடல்ல. இந்தியாவில் இந்த பன்முகத் தன்மை பல நூற்றாண்டுகளாக நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1800 எழுத்து வடிவமற்ற மொழிகளும், அன்றாடம் பேசப்படும் 200 மொழிகளும் உள்ளன.
வாழ்க்கை, கலாச்சாரம், உடை முறைகளில் வேறுபாடு காணப்பட்டாலும் இவை அனைத்தும் ஒரே கொடி, ஒரே அரசியலமைப்பு சட்டம், ஒரே நாடு, ஒரே முறையின் கீழ் பின்பற்றப்பட்டு வருகின்றன. நமது கலாச்சார சுதந்திரம் காரணமாக இந்த பன்முகத் தன்மையை நம்மால் பின்பற்ற முடிகிறது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார். நாட்டில் பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற் சிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் சதித்திட்டத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் ஜனாதிபதியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் பாஸிச அரசு, இந்திய சட்ட ஆணையத்திடம் பொதுசிவில் சட்டம் கொண்டுவருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து, தனது பரிந்துரைகளை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும்படி கோரியுள்ளது.சுதந்திர இந்திய வரலாற்றில் மத்திய அரசின் இந்திய விபரீதப் போக்கை முதன்முறையாக பா.ஜ.க அரசு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் வாழும் சமயச் சார்பற்ற கொள்கையில் ஊறித் திளைத்தவர்களுக்கு மத்திய அரசின் இந்தப் போக்கு ஆச்சரியத்தையும், எரிச்சலையும்ஏற்படுத்தியது.
சிறுபான்மை மக்கள் மத்தியில் குறிப்பாக, முஸ்லிம் சமுதாயத்தில் மத்திய அரசின் இந்தப் போக்கு மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்த ளிப்பையும் உருவாக்கியது.இந்திய சட்ட ஆணைத்திடம், பொதுசிவில் சட்டத்திற்கு பரிந்துரை செய்ய மத்திய அரசு கோரி யதை அறிந்தே குமுறிக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாயம், இந்திய சட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் பி.எஸ். சௌஹான் அவர்கள் அக்டோபர் 7ம் தேதி வெளியிட்ட 16 கேள்வி அடங்கிய கருத்துக் கேட்பு அறிவிப்பைப் பார்த்ததும், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது என்று கூறுவார்களே, அந்த நிலைக்கு முஸ்லிம் சமுதாய மனோநிலை ஏற்பட்டது.
இதை உணர்ந்த அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், இந்திய சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள கருத்தக் கேட்பு வினாக்களை முஸ்லிம் சமுதாயம் அறிவிப்பு செய்தது. நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பைப் புறக்கணித்து வருகி றார்கள்.அதே சமயம், பொது சிவில் சட்டம் பற்றியும், ஷரீஅத் சட்டம் பற்றியும், குறிப்பாக ‘தலாக்’ விவகாரத்தைப் பற்றியும் இந்திய சட்ட ஆணையத்தின் கோரிக்கையை நிராகரிக்குமாறு அறிவித்திருக் கும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பற்றியும், இந்திய முஸ்லிம்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை ஒரு கையெழுத்து இயக்கம் மூலம் தெரிவிப்பதற்கு நாடு முழுவதிலும் இப்போது அந்த இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது.அந்தக் கையெழுத்து படிவத்தில் பின்வரும் வாச கங்கள் இடம்பெற்றுள்ளன.இஸ்லாமிய ஷரீஅத் கூறும் திருமணம், தலாக், குலா, பஸ்க், விராஸித் ஆகிய சட்டங்களில் எங்களுக்கு முழு திருப்தி இருக்கிறது. இவற்றில் எந்தவொரு திருத்தமும் செய்ய முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.இந்திய அரசியல் சாசனம், எல்லா மதங்களைப் பின்பற்றுவோருக்கும், அவரவர் மதத்தைப் பின்பற்றி நடப்பதற்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறது. ஆகவே, பொதுசிவில் சட்டம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை நாங்கள் ஏற்க மாட்டோம்.
ஷரீஅத் சட்டங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கு அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறு துணையாக இருப்போம்.இந்த கையெழுத்து இயக் கத்தில் கோடிக்கணக்கில் இந்திய முஸ்லிம்கள் கையெழுத்து இட்டு வருகி றார்கள். அதோடு, சமுதா யத்தின் கோபத்தையும் கொந்த ளிப்பையும் அமைதிப் படுத்தும் வகையில் தமிழகத்தில் ஜமாஅத்துல் உலமா சபை முன் னின்று நடத்தும் ஷரீஅத் பாதுகாப்பு மாநாடுகள் மாநிலம் முழுவதிலும் நடந்து வருகின்றன.இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத எழுச்சிப் புயலைப் வளர்த்து வரும் பத்திரிகைகளும், ஊடகங் களும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டம் பற்றிய சாதக, பாதகமான பலப்பல கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தரும் பேட்டிகளும் நாளேடுகளில் வந்த வண்ணம் உள்ளன.இந்நிலையில் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரணாப் முகர்ஜி கூறிய கருத்து முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top