அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் சேவை மையங்கள் அதிகரிப்பு !
Posted by Kodikkalpalayam
on Tuesday, November 29, 2016
0
2017 பிப்ரவரி மாதத்திருந்து ஒன்றுக்கு பதிலாக 2 தனியார் நிறுவனங்கள் சேவைகளை வழங்கவுள்ளன அதுவும் ஏற்கனவே இயங்கிவரும் துபை, ஷார்ஜா மற்றும் அபுதாபி சேவை மையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்ட நிலையில். எனவே, புதிய சேவை நிறுவனங்களை நியமிப்பதற்கான விண்ணப்ப டெண்டர்கள் ஜனவரி 9 ஆம் தேதி பரிசலீக்கப்படும் என்பதால் அதற்கு முன் ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு: www.indembassyuae.org
ஆண்டொன்றுக்கு அபுதாபியில் செயல்படும் இந்திய தூதரகம் வழியாக 60,000 பாஸ்போர்ட் சேவைகளும், துபையில் செயல்படும் துணைத் தூதரகம் வழியாக சுமார் 240,000 பாஸ்போர்ட் சேவைகள் என 3 லட்சம் பாஸ்போர்ட் சேவைகளுடன் 74,000 விசா சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தனியார் பாஸ்போர்ட் சேவை மையங்களில் கூடும் அதீத கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இனி துபையில் 2 மையங்களுக்கு பதிலாக 4 மையங்கள், ஷார்ஜாவில் ஒன்றுக்கு பதிலாக இரண்டு, அபுதாபியில் ஒன்று பதிலாக இரண்டு என 2 வெவ்வேறு தனியார் நிறுவனங்கள் வழியாக சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இதில் அபுதாபி மண்டலத்திற்கான சேவை மையம் தொழிலாளர்கள் அதிகமுள்ள முஸஃபா பகுதியில் அமையவுள்ளது.அதேவேளை கல்பா மற்றும் கொர்பக்கான் பகுதிகளில் இயங்கிவந்த சேவை மையங்கள் மூடப்படுகின்றன.
பாஸ்போர்ட் சேவை கட்டணங்களில் மாற்றமிருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய தூதரக பொறுப்பு அதிகாரி நீதா பூஷன் அவர்கள், தற்போது சேவை வழங்கிவரும் நிறுவனம் சேவை கட்டணமாக 9 திர்ஹமும் வெளிநாடுவாழ் இந்தியர் நல நிதியாக 6 திர்ஹமும் வசூலிக்கின்றன. தற்போதைய புதிய டெண்டரின் வழியாக கோரப்படும் சேவைக்கட்டணத்தை பொறுத்தே மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்தார்.
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்