TNTJ மாணவரணி சார்பில் உணவு விநியோகம்
#*TNTJ_Food_Drive*
#பசி_என்பது_உணர்வு_தான்
#ஆனால்_பணமில்லாத_போது_ஏற்படும் #பசி_மிகவும்_வேதனையானது
உண்ணும் உணவை மதிப்போம்!!!
அனைத்து உயிர்களுக்கும் பொதுவான தேவை உணவு...
பல கோடி செல்வம் தேடி வைத்த செல்வருக்கும் தேவைப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது உணவு தான்...
உணவை குறை சொல்வதோ, வீணாக்குவதோ , பசியால் வாடுவோரை அலட்சியம் செய்வதோ சகிக்க இயலாத செயல் ...
உணவுக்காவே உலகம் இயங்குகிறது... பசி என்ற ஓர் உணர்வு இல்லாதிருந்தால் உலக இயக்கமே உருவற்று போயிருக்கும்...
உணவை பெற ஏங்கி தவிப்போர் ஒரு பக்கம்... பகட்டாக குப்பையில் வீசி செல்வோர் ஒரு பக்கம்... நம் கையில் புரளும் உணவு கடந்து வந்த நிலையை உணர்ந்தால் அதை வீணாக்க இயலாது...
உணவின் தேவையை ஒவ்வொரு இயற்கைச் சீற்றமும் உணர்த்திவிட்டு தான் செல்கிறது... ஏழை செல்வந்தர் பாகுபாடு இன்றி உணவிற்கு தவிக்கும் நிலைக்கு தள்ளி விடுகிறது...
உணவு என்பது ஓர் உணர்வு என்பதை புரிவோம்... வீணாக்காமல் பசி என வாடுவோருக்கு பகிர்ந்தளிப்போம்...
#உண்ணுங்கள்_பருகுங்கள்_ஆனால்_வீண்_விரயம்_செய்யாதீர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொடிக்கால்பாளையம் கிளை-மாணவரணி *(Student Wing)*
சார்பில் 14/09/2020 இன்று
*(Food Drive)* ஒரு வேலை உணவிற்கு கஷ்டப்படும் யாசிபவர்களுக்காகவும் #2️⃣5️⃣ நபர்களுக்கு தரமான உணவு
#திருவாரூர் பகுதியில் தெருவோரங்களில் உள்ள ஆதரவற்ற,ஏழை,எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...❤️
#என்றும்_சமுகபணியில்
கொடிக்கால்பாளையம்
TNTJ *(Student Wing)*
இது போன்ற தெருவோரங்களில் உள்ள ஆதரவற்ற,ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து
உணவு வழங்கி வருகிறோம்
பொருளாதாரத்தை
வாரி வழங்குவீர் 👇🏽
📞+91 9715722212
📞+91 96887 70369
#பூமியில்_உள்ளவர்கள்_மீது_நீங்கள் இரக்கம் காட்டாதவரை வானில் உள்ள #இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டபோவதில்லை....!

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்