கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் மற்றும் பணம் மோசடிகளில்ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் - விசாரனையில்அம்பலமான

Posted by Kodikkalpalayam on Wednesday, May 26, 2021 0

கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் மற்றும் பணம் மோசடிகளில்
ஈடுபட்ட இலியாஸ் குழுவினர்
- விசாரனையில் அம்பலமான உண்மைகள்


கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் மற்றும் பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ் குழுவினர் - விசாரனையில் அம்பலமான உண்மைகள் 18 ஆண்டுகளுக்கு முன் கொடிக்கால் பாளையம் முஸ்லிம் தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் தவ்ஹீத் சகோதரர்கள் இயங்கி வந்தனர். அது 2014 ம் ஆண்டு அது கலைக்கப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடன் இணைக்கப்பட்டது. இந்த பகுதியில் 2014 க்கு முன் ஒரு பள்ளி கீழ் தளம் மட்டும் இருந்த நிலையில் இயங்கி வந்தது. அது முழுமையாக TNTJ கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டு 2014 முதல் பராமரித்து தவ்ஹீத் ஜமாஅத் கிளையாக செயல்பட்டு வந்தது. அதன் பின் அனைத்து செயல்பாடுகளும் TNTJ பெயரில் இயங்கி வந்தது. # சந்தா வசூல் TNTJ பெயரில்... # கரண்டு பில் TNTJ பெயரில்... # வரவு செலவு TNTJ பெயரில்... # மினிட் ஏடு TNTJ பெயரில்..... # பிட்நோட்டீஸ் TNTJ பெயரில்... # ஜும்மா தாயிகள் TNTJ தாயிகள்... # இதர வசூல் TNTJ பெயரில்... # பள்ளி மேல் தளம் பில்டிங் கட்ட வசூல் TNTJ பெயரில்..... # எல்லா நிகழ்ச்சிகளுக்கும் TNTJ தாயிகள் ... என்று எல்லா விதத்திலும் தவ்ஹீத் ஜமாஅத் 8 ஆண்டு காலமாக இயங்கி வந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை தாவா பணிகள் வீரியமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் 2019 ஆம் வருடம் பேங்கில் தவ்ஹீத் ஜமாஅத் அக்கவுண்டில் இருந்து ஒரு நான்கு லட்சம் சொச்ச பணத்தை கிளை தலைவராக இருந்த இல்யாஸ் என்பவர் ஏற்கனவே கலைக்கப்பட்ட கொடிக்கால்பாளையம் முஸ்லிம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் ஒருவரை புதிதாக உருவாக்கி அதன் பெயரில் ஒரு நிலத்தை வாங்குகிறார்.

இந்த மோசடி செயல் TNTJ கொடுக்கால்பாளையம் அனைத்து உறுப்பினர்களுக்களுக்கோ அல்லது சக நிர்வாகிகளுக்கோ தெரியாமல் இல்யாஸ் என்பவரும் அவரின் சகோதரரும் இணைந்து இந்த நில மோசடியை செய்துள்ளார்கள். அது அந்த பகுதியில் ஏற்கனவே கொடிக்கால்பாளையம் முஸ்லிம் தவ்ஹீத் ஜமாஅதில் இருந்த சில நபர்களுக்கு தெரிய வந்து அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கிறார்கள். இது போல் இல்யாஸ் தவ்ஹீத் ஜமாஅத் பணத்தை எடுத்து தனி குடும்ப சொத்தாக மாற்றும் வேலையை செய்கிறார் இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகம் விசாரிக்கவும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அதன் அடிப்படையில் TNTJ மாவட்ட நிவாகிகள் இல்யாஸிடம் ஏன் TNTJ வுடைய பணத்தை எடுத்து எப்படி உங்களுக்கு தெரிந்தவர்கள் பெயரில் பத்திர பதிவு செய்தீர்கள் அது தவ்ஹீத் ஜமாஅத் க்காக மக்கள் நம்பி கொடுத்த பணம் அதை மோசடியாக பெயர் மாற்றி பத்திரம் செய்துள்ளீர்களே என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆமாம் தப்புதான் ஆனால் இதை TNTJ வுக்கு தரமுடியாது. ஏனெனில் தவ்ஹீத் ஜமாஅத்தில் பாலியல் குற்றம் செய்தவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கிறீர்கள். நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் அவர்கள் ஒரு ஜமாஅத் தாக பிரிந்து விட்டார்கள். அதனால் தவ்ஹீத் ஜமாஅத்தில் பிரிவு ஏற்ப்பட்டு விட்டது. எனவே நான் இந்த சொத்தை தவ்ஹீத் ஜமாஅத் பெயருக்கு மாற்ற முடியாது. வேனும் என்றால் சில அற்ப தொகை தருகிறேன் அதை எடுத்து கொண்டு இந்த பள்ளியை விட்டு இன்றுடன் சென்று விட வேண்டும். இனி உங்களுக்கு மினிட் புத்தகமோ அல்லது வரவு செலவு கணக்கோ அல்லது இடமோ தரமாட்டோம் இது தான் எங்களில் சிலரின் முடிவு என்றார். TNTJ பெயரலில் சுமார் 8 ஆண்டுகள் இங்கு ஜமாஅத் இயங்கி வரும் நிலையில் உங்கள் நில மோசடியை கேட்டதற்க்காக உடனே வெளியே போ என்பது அநியாயம். 8 ஆண்டுகள் TNTJ பெயரில் பணம் வசூல் செய்து அதன் வரவு செலவு கணக்கை காட்டாமல் இருப்பது அநியாயம். 8 ஆண்டுகள் TNTJ மினிட் புத்தகத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுள்ள நிலையில் அதை TNTJ விடம் ஒப்படைக்க முடியாது என்று சொல்வது அநியாயம் இரவோடு இரவாக கள்ளத்தனமாக தவ்ஹீத் ஜமாஅத் பெயர் பலகையை அழித்தது மோசடி என்று தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாவட்ட நிர்வாகிகள் தெளிவு படுத்தியும் பெண் குற்றச்சாட்டினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஜமாஅத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டவர்களின் ஆலோசனைகளையும் அவர்களின் அடிவடிகளை பள்ளியில் பேச்சு வார்த்தை நடைபெறும் இடத்திற்கு கீழ் தளத்தில் வரவழைத்து அவர்களின் வலையில் வீழ்வதும் உண்மையான தவ்ஹீத் சொந்தகளை உதாசினப்படுத்தியதும் இந்த இல்யாஸ் என்பவரின் நோக்கமாக இருந்தது. இவ்வளவு அயோக்கிய தனங்களையும் செய்து விட்டு பொது வெளியில் TNTJ மோசடி செய்தது போல பரப்பி வருகின்றனர் இந்த இல்யாஸ் குடும்பத்தினர். TNTJ வை பொருத்தவரை யாருடைய இடத்திற்கும் உரிமை கொண்டாடாது. நமது நோக்கம் மக்கள் சொர்க்கம் செல்ல அல்லாஹ்வின் பாதையை நோக்கிய தாவா தான். அவ்வாறு தூய உள்ளத்துடன் செயல் படும் போது அல்லாஹ் பல உதவிகளை இந்த ஜமா அத்துக்கு செய்து வருகிறான். அல்ஹம்துலில்லாஹ். அதே நேரத்தில் மோசடி செய்பவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டாமல் TNTJ கடந்து செல்லாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம். أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَّبَذَهُ فَرِيقٌ مِّنْهُم ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ அவர்கள் ஒப்பந்தம் செய்யும் போதெல்லாம் அவர்களில் ஒரு பகுதியினர் அதை வீசி எறிந்ததில்லையா? மாறாக அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். திருக்குர்ஆன் 2:100 ஒருவர் வீட்டில் வாடகை இருந்தாலே வீட்டை காலி செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது விதி. இந்த இல்யாஸ் என்பவரோ TNTJவின் நிலத்தை மோசடியும் செய்து விட்டு அதை கேட்டதனால் TNTJவை உடனே இடத்தை காலி செய் என்று சொல்லி விட்டு.  

பொதுமக்களிடம் TNTJ இடத்தை அபகரிப்பு செய்ய வந்து விட்டார்கள் என்று ஆடியோ பரப்பும் இவரின் செயல் எவ்வளவு இழி செயல் என்பதை கொடிக்கால் பாளையம் முஸ்லீம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top