அன்சாரி ஒலியுல்லாவும் அறிவை அடகு வைத்த கொடிக்கால்பாளையம் அவ்லியா பக்தர்களும்
Posted by Kodikkalpalayam
on Tuesday, December 25, 2012
0
ஏக இறைவனின் திருப்பெயரால்,,,,,,,,
அன்சாரி ஒலியுல்லாவும் அறிவை அடகு வைத்த அவ்லியா பக்தர்களும்
இஸ்லாம் என்பது அல்லாஹ்வினால் இம்மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு அதை இறுதித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலம் பூரணமாக்கிவிட்டான் என்பது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதுபோல் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கும் சுரண்டல்களையும் தடுத்துவிட்டது. இஸ்லாத்தில் இடைத்தரகர்களோ, மூட நம்பிக்கைகளோ சிறிதுமில்லாமல் அதன் வாசலை முற்றிலுமாக அடைத்துவிட்டது. ஆனால், இன்று இஸ்லாத்தில் இல்லாத தகடு, தாயத்து, தர்கா வழிபாடு போன்றவற்றை இஸ்லாத்தினுள் புகுத்தி அதையே இஸ்லாம் என்று நடைமுறப்படுத்தி மார்க்கத்தின் பெயரால் சில அறிஞர்கள் (?) பிழைப்பு நடத்தி வந்தனர்; இன்றும் நடத்தி வருகின்றனர். அதிலொன்றுதான் கேடு கெட்ட தர்கா வழிபாடு.
கொடிக்கால்பாளையம் மேலத்தேருவில் இருக்கும் செய்யது முஹம்மது அன்சாரி காமில் ஒலியுல்லாஹ் அவர்களுக்கு சந்தனம் பூசும் விழா என்று நரகத்திற்கு அழைத்து செல்லும் ஒரு கேடுகட்ட காரியத்தை அரங்கேற்றினர் ஒரு சில மேலதெரு வாசிகள் ...
அனைவரும் வருக அருள் ஆசி பெருக....
அட பாவிகளா... இறைவனை மட்டும் வழிபடவேண்டும் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம் படைத்த அல்லாஹ்வையும் கேலி செய்யம் வகையிலும் இணை வைக்கும் காரியத்தை நடத்தினர்....இதற்க்கு வருக வருக நரகத்திர்கு போக வருக...பேனர் ஒரு கேடு....
இறைவன் சொல்கிறான்
ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இறந்த ஒரு மனிதனால் கேட்கவோ, பார்க்கவோ முடியாது!
குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச்செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. (திருக்குர் ஆன் 35:19-22)
மரணித்தவர்கள் கேட்க மாட்டார்கள் என்று அல்லாஹ் தெளிவாகவே சொல்லிவிட்டான். ஆனால் இன்று மக்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றனர்? அவ்லியாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் செவியேற்பார்கள். எமது கோரிக்கையை நிவர்த்தி செய்வார்கள் என்று குருட்டுத்தனமாக நம்பி நரகத்தின் கொள்ளிக்கட்டையாகிக்கொண்டிருக்கின்ரனர். இதை விட்டும் அல்லாஹ் எம்மை காப்பாற்ற வேண்டும்.
எப்போது திருந்தும் சீரணி வாங்கும் கூட்டம்...
இந்த அனாச்சாரம் நடைபெற துவங்கும் நேரம் முதல் சீரணி (பாவ சோறு) சுமார் 200கும் அதிகமான பொட்டலங்கள் போடப்பட்டு தயார் நிலையில் இருக்கும் நேற்று நடந்த இந்த கூட்டத்தில் இதற்க்கு அடித்துகொண்டு பெற்றது வேதனையாக உள்ளது....மார்க்கம் பல காரியத்தை சொல்லும்... ஆனால்,அதை பின்பற்ர வழியை காணூம்...
இன்ஷா அல்லா நமதூர் கொடிக்கால்பாளையம் மக்களுக்காக இதை பார்க்க கூடிய படிக்க கூடிய மக்களும் துவா செய்வோம்...
செய்தி தொகுப்பு
உண்மையை உரக்க ஊருக்கு சொல்லும் பனி தொடரும்
மாணவர் அணி
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்