கிடப்பில் போடப்பட்ட மேலத்தெரு நீர் தேக்க தொட்டி,, தீர்வு கிடைக்காத கா.மி (பூங்கா)
Posted by Kodikkalpalayam
on Saturday, May 11, 2013
0
அல்லாஹ்வின் திருப்பெயரால்...

திருவாரூர்: கொடிக்கால்பாளையம் மேலத்தெரு 7 வார்டு காயித மில்லத் (பூங்கா) மற்றும் (குழந்தைகள் மையம்) இருந்த இடத்தில கடந்த ஜனவரி 26 தேதி அன்று மேல்நிலை நீர்தேக்க தொட்டி தொடக்கத்தை (பூமிபூஜை) நகராட்சி சேர்மன் வி.ரவிச்சந்திரன் மற்றும் வார்ட் உறுப்பினர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார் மாதம் 4 ஆகியும் பள்ளம் தோண்டப்பட்டு இதுவரை பணிகள் துவங்காமல் உள்ளது.கடந்த காலங்களில் பூங்காவாக இருந்த இடத்தை இப்போது நீர்தேக்க தொட்டி அமைக்கிறோம் என்று இருந்த (பால்வாடி பள்ளி) குழந்தைகள் மையம் உடைத்து இப்போது காடாக காட்சி தருகிறது .நமதூர் பூங்கா. மேல்நிலை நீர்தேக்க தொட்டி திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்றும் பரவலாக பேச படுகிறது எது எப்படியோ மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை உடனடியாக காலம் தாழ்த்தாமல் செய்தால் நன்றாக இருக்கும் என்பது ஊர் மக்களின் கோரிக்கை...

0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்