பொறியியல் கலந்தாய்வுக்கு (கவுன்சிலிங்) செல்லும் கொடிக்கால்பாளையம் மாணவ/மாணவிகள் கவனத்திற்கு

Posted by Kodikkalpalayam on Thursday, June 20, 2013 0

பொறியியல் கலந்தாய்வுக்கு செல்லும் கொடிநகர் மாணவ/மாணவிகள் கவனத்திற்கு 
                              
கட் ஆப் மார்க் கணக்கிடும் முறை 

மொத்த மதிப்பெண்கள் 200% இதில் கணிதம் 100 %இயற்பியல் 50 %மற்றும் வேதியல் 50 %

இம்மதிப்பெண்கள் அடிபடையிலே ரேங்க் லிஸ்ட் தயாரிக்கப்படும் .ஒரே மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரேண்டம் நம்பர் கொடுக்கப்படும் .அந்த ரேங்க் அடிப்படையில்  கலந்தாய்விற்கு அழைக்கபடுவர் .ஆகவே அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதலில் அழைக்கபடுவார்கள்.

கவுன்சிலிங் செல்லும் முன் 

குறைந்தது 10 கல்லுரி மற்றும் பாடத்திட்டங்களை தேர்வு செய்து வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ள  வேண்டும் .பல கல்லூரிகள் ஒரே பெயரில் இயங்குவதால் கல்லூரியின் அடையாள எண்ணையும்(CODENOகுறித்துக்கொள்ள வேண்டும் வாய்ப்பு கிடைத்தால் கல்லூரிகளை நேரில் சென்று பார்த்து ,அங்கு பயிலும் மாணவர்கள் முன்னாள் மாணவர்களுடன் உரையாடுவதின் முலம் கல்லூரியின் உள் கட்டமைப்பு ஆசிரியர்களின் தரம் ,கட்டண விவரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொண்டு கல்லூரிகள் மற்றும் பாடதிட்டத்தினை தேர்வு செய்யும் . புதிய கல்லூரிகளை விட பழைய கல்லூரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .நம்முடைய கட் ஆப் மதிப்பெண்களுக்கு சென்ற வருடம் எந்தெந்த கல்லூரிகளில் இடம் கிடைத்து உள்ளது என்பதை இணையதளத்தில் காணலாம் .
                                              


கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பொழுது கவனிக்க வேண்டியவை 

நாம் அழைக்கப்பட்ட தினத்தில் கலந்தாய்விற்கு செல்லும் பொழுது அணைத்து சான்றிதழ்களையும் கொண்டு செல்ல வேண்டும் ,குறிப்பாக 10th ,+2 மதிப்பெண் சான்றிதழ் ,சாதி சான்றிதழ், இருப்பிட சான்று  அல்லது ரேஷன் அட்டை , + 2 ஹால் டிக்கெட் முதலியவை எடுத்துச்செல்ல வேண்டும்.கவுன்சிலிங் கட்டணத்தை செலுத்தி ரசிது பெற்றுக் கொள்ள  வேண்டும்.

கவுன்சிலிங் அரங்கில்  

கவுன்சிலிங் அரங்கில்  உள்ள திரையில் காலியிடங்கள்  குறித்த தகவல்களை  அறிந்து கொள்ளலாம் .பாடப்பிரிவுகளைக் காட்டிலும் கல்லூரியின் தரத்திற்கு முக்கியத்துவம் தருவது நல்லது  சில குறிப்பிட்ட துறையில் தான் அதிக சம்பாதிக்க முடியும் என்பது தவறு    கவுன்சிலிங் அரங்கில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆலோசிக்கவேண்டாம்.உள்ளே சென்றதும் பதட்டமில்லாமல் அவர்கள் அவசரப்படுத்தினாலும் நாம் சற்று நிதானமாக ,அதே சமயம் சற்று விரைவாக கல்லூரியை தேர்தெடுக்க வேண்டும் .
 ஒரு முறை கல்லூரியை தேர்வு செய்து விட்டால் அதனை மாற்ற இயலாது எண்பதனை  நினைவில் கொள்ள வேண்டும்

இந்த வருடம் அதிகமாக நமதூரில்   +2 முடித்த  மாணவா/மாணவிகள் கலந்தாய்வில் பங்குப்பெற இருக்கிறார்கள் .அவர்கள் இந்த கலந்தாய்வில் தரமிக்க கல்லூரிகளையும் மற்றும் வேலை வாய்ப்பு மிக்க பாடதிட்டத்தினை தேர்வு செய்ய கொடிக்கால்பாளையம் ,இன்  சார்பாக பிராத்திக்கிறோம் 

ஆக்கம் : தௌபிக்

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top