கை குழந்தையுடன் சிறை நிரப்ப தயாரான கொடிநகர் மக்கள் (முழு செய்தி புகைப்டதொகுப்பு)
Posted by Kodikkalpalayam
on Wednesday, January 29, 2014
0
ஏக இறைவனின் அருளால்...
அல்லாஹ்வின் அருளால் தமிழக முஸ்லிம்களில் வாழ்வாதார கோரிக்கையான தனி இடஒதுக்கீடை அதிகபடுத்த கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை திருச்சி செயற்குழுவில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது,
அறிவிப்பு வெளியானது தான் போதும் சமுதாயத்துக்க உழைக்க தயாராக இருக்கும் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்கள் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட வேலையை மூன்று மாதங்களுக்கு முன்பே துவங்கினர் சுவர் விளம்பரம் ப்ளெக்ஸ் விளம்பரம் தெருமுனை கூட்டம் தனிநபர் சந்திப்பு என்று என்னில் அடங்காத வகையில் சிறை செல்ல கொடிக்கால்பாளையம் மக்களை தயார் படுத்தினர் அல்லாஹ்வின் அருளை கொண்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது
ஜனவரி மாதம் நெருங்கியது......
இடண்டு மாத பிரச்சாரம் முடிந்த நிலையில் ஜனவரி நெருங்கியது நாளுக்குநாள் தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சார வேகம் நாள் நெருங்க நெருங்க சூறாவளியா சுழன்று அடித்தது (பேனா செயின் ஸ்கூல் பேக் மிதி வண்டி இருசக்கர வாகனம்) என்று தமிழக வரலாற்றில் இப்படி ஓர் பிரச்சார வழியை யாரும் இதுவரை செய்தது இல்லை என்று ஊர் முழுவதும் பேசப்பட்டது
ஊர் ஜமாத்தார்களுக்கு அழைப்பு
இறைவனின் கிருபை கொண்டு மாநில தலைமை அறிவித்ததின்படி நமதூர் கொடிக்கால்பாளையம் இரண்டு சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் ஜனவரி28 சிறை செல்லும் போராட்ட அழைப்பு மாவட்ட நிர்வாகம் மற்றும் கிளை நிர்வாகிகள் மூலம் வழங்கபட்டது
ஊரில் விசமிகளின் பொய் பிரச்சாரம்...
சிறை செல்லும் போராட்டத்தின் மக்களின் வரவேற்ப்பு ஜமாஅத் சந்திப்பு பொருத்துகொள்ள முடியாத சில இயக்க மரம் களுண்ட விசமிகள் (சுனாமி திருடர்கள்) முசாபர் நகர மக்களுக்கு வசூல் என்று ஓர் தெருமுனை கூட்டம் போட்டு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் கலந்து கொள்ள கூடாது என்று கூவினர் அல்லாஹ் அவர்களுக்கு போராட்ட புகைப்டம் மூலம் பாடம் கற்பித்தான்
தீடிர் போஸ்டர் திடீர் நோட்டிஸ்.....
விசமிகளின் வேலை கூட்டத்துடன் முடித்துக்கொள்ள வில்லை ஒ த ஜ (வெத்துவெட்டி) என்ற அமைப்பு நாகூரில் வெளியட்ட போஸ்டர் நோட்டிஸ் அனைத்தையும் ஊரில் இந்த விசமிகள் வாங்கி ஒட்டினர் கொடுத்தனர் இவர்களின் போஸ்டர் மக்களை போராட்ட களத்திற்கு போக விடாமல் தடுத்து விடும் என்று தப்பு கணக்கு போட்டனர் அல்லாஹ் அந்த சூழ்ச்சியையும் முறியடித்து ஐந்து பேருந்துகள் பற்றா குறையாக பொதுமக்களை கூட்டினான்
முகநூளிலும் பரபரபப்பு
சிறை வாசம் வீச வீச சமூக இனைய தலமான முகநூளிலும் நமது ஜமாஅத் பற்றி அவதூறு செய்திகள் வந்த வண்ணன் இருந்தன இவை அனைத்திற்கும் முகநூளில் கொள்கை சகோதர்கள் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது இன்னும் ஒரு படி மேல்போய் அல்லாஹ் திருச்சியை திணற வைத்து பாடம் கற்பித்துவிட்டான்
அல்லாஹ்வின் அருளால் கொடிகால்பாளையம் வரலாற்றில் சிறை செல்ல துணிச்சலுடன் நூற்று கணக்கான மக்கள் கை குழந்தையுடன் கூடியது இதுவே முதல் முறை யாகும் ஐந்து பேருந்துகள் இரண்டு வேன் மற்றும் மூன்று கார் என நூற்றுக்கணக்கான மக்கள் திருச்சி சிறை செல்லும் போராட்ட களத்திற்கு வருகை தந்தனர் கலந்து கொண்ட அணைத்து மக்களுக்கும் இவை அனைத்திற்கும் பொருளாதார உதவி செய்த நல்லுள்ளங்களுக்கும் கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
(புகைப்டதொகுப்பு)
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். (ஸூரத்துந் நஸ்ர்)போராட்டத்திற்கு மக்கள் வெள்ளத்தை கொண்டுவந்து சேர்த்த அல்லாஹுக்கே அனைத்துப்புகழும் உண்டாகட்டுமாக! இதற்காக தங்களின் உடலாலும்,பொருளாலும் அல்லும் பகலும் உழைத்த ஏகத்துவ சொந்தங்களுக்கு வல்லரஹ்மான் ஈருழகிலும் நற்கூலியை தருவானாக!
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்