சென்னையை அதிரச்செய்தது தவ்ஹீத் ஜமா அத் !! ஆயிரக்கணக்கானோர் கைது
Posted by Kodikkalpalayam
on Tuesday, June 17, 2014
0
இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையின் அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் சிங்களர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பாக தவஹீத் ஜமா அத் அமைப்பினர் இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் தாக்குதலில் ஈடுபட்ட பொதுபல சேனா அமைப்புக்கு தடை விதிக்கவும் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதாக தவ்ஹீத் ஜமா அத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்