கொடிக்கால்பாளையத்தில் #TNTJ சார்பில் பேரிடர் கால இரத்ததான முகாம் !
கொடிக்கால்பாளையத்தில் #TNTJ சார்பில் பேரிடர் கால இரத்ததான முகாம் !
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்.
நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
#முஸ்லிம்_சமுதாய_பேரியக்கமான_தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் பேரிடர் கால இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 129வது பேரிடர் கால இரத்ததான முகாம் திருவாரூர் வடக்கு மாவட்டம்
*“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை ”* மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து புதன்கிழமை இன்று *02.09.2020 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த *129வது இரத்ததான முகாம்” சிறப்பாக நடைபெற்று முடிந்தது.*
கொரோனா நோய்த் தொற்று மற்றும் தனி மனித இடைவெளி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள், நடைமுறை சிரமங்கள் இருந்தும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் மருத்துவமனையின் பிரதான கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த
*இரத்ததான முகாமில் “50 நபர்கள்”* *கலந்து கொண்டனர்.* உடற்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு *“25 நபர்கள் இரத்ததானம்” செய்தனர்.*
கொரோனோ நோய்த் தொற்று அச்சுறுத்தல் உள்ள சம காலச்சுழலில் இம்முகாம் மிகப்பெரும் முன்னுதாரணமாகவும், ஏனைய தன்னார்வ கொடையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் அமையப்பெற்றிருந்தது.
கொரோனோ அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில் *குருதிக் கொடையளித்த சகோதர்களுக்காகவும் களப்பணியாற்றிய அனைத்து சகோதர்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.*
இம்முகாமில் “தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
*நிகழ்ச்சித்துளிகள்* 👇
🩸மதியம் 09:30 மணி முதல் மாலை 01 மணி வரை மட்டுமே நடைபெற்றது.
🩸நிகழ்ச்சி நகராட்சி துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
🩸குருதிக் கொடையாளர்களின்
பாதுகாப்பு கருதி தனிமனித இடைவெளி, முகக்கவசங்கள், சானிடைசர், கையுறைகள்” போன்ற நோய்ப் பரவல் தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
#அல்ஹம்துலில்லாஹ்!
*என்றும் சமுதாய & மனிதநேயப் பணியில்...*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,*
கொடிக்கால்பாளையம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்
02.09.2020
*KODIKKALPALAYAM | KOMTNTJ | TNTJ |BLOOD | CAMPAIGN | EMERGENCY | HUMANITIES | SAVE LIVES*
#புகழனைத்தும்_அல்லாஹ்_ஒருவனுக்கே...!🔥💪♥️✌️☝️👍
#அல்ஹம்துலில்லாஹ்...!🔥💪♥️✌️☝️👍

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்